Do you know how many calories are these foods you are eating?

நாண் ரொட்டி

நாண் ரொட்டி என்பது ஓவனில் வாட்டி தட்டையாக சமைக்கப்படும் ரொட்டி வகை உணவாகும். 

கலோரிகளின் அளவு: ஒரு நான் ரொட்டியில் 317 கிலோ கலோரிகள் இருக்கும்.

பர்பி

இந்திய இனிப்பு வகையில் ஒன்றான பர்பி செவ்வக வடிவில் இருக்கும். சர்க்கரை கலந்த பாலில் உலர்ந்த பழங்கள் மற்றும் மிதமான மசாலாக்கள் சேர்த்து, பாலை சுண்ட காய்ச்சி தயாரிக்கப்படுவது தான் பர்பி. பின் அதனை ஒரு தட்டையான தட்டில் ஊற்றி, அதனை சின்ன துண்டுகளாக வெட்ட வேண்டும். இந்த துண்டுகளை உண்ணக்கூடிய சில்வர் தகடு மூலம் அலங்கரிக்கலாம்.

கலோரிகளின் அளவு: ஒரு துண்டில் தோராயமாக 103 கிலோ கலோரிகள் இருக்கும்.

அல்வா

அல்வா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அடர்த்தியான இனிப்பு வகையை சேர்ந்த அல்வா இந்தியாவின் புகழ் பெற்ற இனிப்பு வகையாகும். அல்வாவில் பல பொருட்களும் சேர்க்கப்படலாம். அதில் சூரியகாந்தி விதைகள், நட்ஸ், பீன்ஸ், பருப்புகள், கேரட், பூசணி, சேனைக்கிழங்கு போன்றவைகள் சில உதாரணங்கள்.

கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 570 கிலோ கலோரிகள் இருக்கும்.

ஜிலேபி

ஜிலேபி என்பது மற்றொரு புகழ் பெற்ற இந்திய இனிப்பு வகையாகும். கோதுமை மாவை வட்ட வடிவில் நன்றாக பொறித்து, பின் சர்க்கரை சிரப்பில் ஊற வைத்து செய்யப்படுவது தான் ஜிலேபி. இந்த பலகாரத்தை வெதுவெதுப்பாகவோ அல்லது ஆற வைத்தோ உண்ணலாம். மெல்லக்கூடிய வகையில் இருக்கும் இந்த பலகாரத்தின் வெளிப்புறம் சர்க்கரை கற்களால் சூழப்பட்டிருக்கும்.

கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 459 கிலோ கலோரிகள் இருக்கும்.

ரசமலாய்

ரசமலாய் என்பது மற்றொரு புகழ் பெற்ற இந்திய இனிப்பு வகையாகும். ரச என்றால் ஜூஸ் என்றும், மலாய் என்றால் க்ரீம் என்றும் பொருள்.

கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 250 கிலோ கலோரிகள் இருக்கும்.

சோலே படூரே

சனா பூரி என்றும் அழைக்கப்படும் இந்த உணவு கொண்டைக்கடலை மற்றும் பூரியுடன் சேர்த்து உண்ண வேண்டும்.

கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 450 கிலோ கலோரிகள் இருக்கும்.

பட்டர் சிக்கன்

அடிப்படையில் வடஇந்திய உணவான பட்டர் சிக்கன் ஒரு புகழ் பெற்ற உணவு வகையாகும். இது கிடைக்காத இந்திய உணவகங்களே இல்லை என்று கூட கூறலாம். முந்திரி, பாதாம், தக்காளி மற்றும் வெண்ணெயை கொண்டு தயாரித்த க்ரீமி சாஸில் சமைத்த சிக்கனை போட்டு செய்யப்படுவது தான் பட்டர் சிக்கன்.

கலோரிகளின் அளவு: ஒரு முறை பரிமாறும் அளவில் 490 கிலோ கலோரிகள் இருக்கும்.

ஃபலூடா

ஃபலூடா என்பது குளிர்ந்த இனிப்பு வகையை சேர்ந்த ஒரு பானமாகும். ரோஸ் சிரப், சேமியா, ஜெல்லி மற்றும் மரவள்ளிக்கிழங்கு பால், தண்ணீர் அல்லது ஐஸ் க்ரீமுடன் சேர்த்து இதனை தயாரிக்கலாம்.

கலோரிகளின் அளவு: ஒரு பெரிய டம்ளரில் தோராயமாக 300 கிலோ கலோரிகள் இருக்கும்.

பன்னீர் புர்ஜி

பன்னீர் புர்ஜி ஒரு சிறந்த காலை உணவாகவும் விளங்கும். சப்பாத்தி அல்லது பரோட்டாவுடன் சேர்த்து இதனை இரவும் உண்ணலாம்.

கலோரிகளின் அளவு: ஒரு மீடியம் அளவு கிண்ணத்தில் தோராயமாக 412 கிலோ கலோரிகள் இருக்கும்.

பாவ் பாஜி

பாவ் பாஜி என்பது மராத்திய வகை துரித உணவாகும். பாவ் பாஜியில் மல்லிச்செடி, வெங்காயம், எலுமிச்சை சாறு கலந்த பாஜி (அடர்த்தியான உருளைக்கிழங்கு க்ரேவி) மற்றும் வாட்டிய பாவ்வும் (பன்) இருக்கும். இந்த பாவ்வின் அனைத்து பக்கங்களிலும் வெண்ணெய் தடவப்படும்.

கலோரிகளின் அளவு: ஒரு தட்டில் தோராயமாக 600 கிலோ கலோரிகள் இருக்கும்.