Do you know Eagoda fruit eating eyes are healthy ...

கொலஸ்ட்ரோலை குறைக்கும்

அவகாடோ பழத்தை தொடர்ந்து டயட்டில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரோல் பிரச்சனைகள் குறையும். மேலும் இது உடலில் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.

நார்ச்சத்து மிக்கது

அவகாடோ பழத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால் உடல் எடையைக் குறைக்கவும், உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவும். மேலும் செரிமான பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையும் சீராக்கும்.

சிறுநீரக பாதிப்பு

இப்பழத்தில் உள்ள ஒலியிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். சிறுநீரக பிரச்சனைகளும் வராமல் இருக்க அவகாடோ பழத்தை அடிக்கடி உட்கொள்ளலாம்.

ஆரோக்கியமான கண்கள்

அவகாடோவில் லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் பண்புகள் அடங்கியுள்ளது. இந்த கரட்டினொய்டுகள் கண் புரை மற்றும் மாகுலர் திசு செயலிழப்பு ஏற்படுவதைக் குறைக்க உதவும்.

மேலும் கண் பார்வை பிரச்சினைகளையும் சரிசெய்து ஆரோக்கியமான பார்வைக்கு உதவும்.