Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்குத் தெரியுமா? உடல் எடை குறைய சூடான தண்ணீருடன் இவற்றை கலந்து குடிக்க வேண்டும்...

Do you know Drink the body weight with hot water and mix it with ...
Do you know Drink the body weight with hot water and mix it with ...
Author
First Published Mar 22, 2018, 1:52 PM IST


மருத்துவர்கள் தினமும் 7-8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் அவை தான் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை, உடலில் இருந்து வெளியேற்ற பயன்படுகிறது. அதிலும் சில மக்கள் குளிர்ந்த நீரைத் தான் அதிகம் குடிக்க விரும்புகின்றனர்.

ஆனால் உண்மையில் அவற்றைவிட சூடான தண்ணீர் தான் உடலுக்கு மிகவும் நல்லது. மேலும் பல நன்மைகளும் சுடு நீரைப் பருகுவதனால் உள்ளது. 

** சுடு தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமான ஒன்று, உடலை சுத்தப்படுத்துவது. 

** செரிமானம் குறைவாக ஏற்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால், செரிமானம் நன்றாக நடைபெறும்.  

** தினமும் காலையில் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும். 

** ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு அல்லது தேனைக் கலந்து குடித்தால், உடலுக்கு நல்லது.

** இன்று நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஈஸியான மருத்துவ செலவில்லாமல் சரிசெய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு சுடு தண்ணீரை குடித்தால், பிரச்சனை நீங்கிவிடும். 

** மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நிறைய கழிவுப் பொருட்கள் குடலில் தங்குவதால் தான் ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி, வயிற்று உப்புசம் என்றெல்லாம் ஏற்படுகிறது. ஆகவே அந்நேரத்தில் சுடு நீரைக் குடிக்க வேண்டும். 

** ஏனெனில் சுடு நீர் உணவுப் பொருட்களை எளிதாக உடைக்கும் தன்மையுடையது. ஆகவே அது குடலில் தங்கிவிடும் தேவையற்ற கழிவுகளை நீக்கி, குடலை நன்கு வேலை செய்ய வைக்கும். இதனால் மலச்சிக்கல் நீங்கும்.

** உடல் எடை குறைய வேண்டுமென்றால், ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஊற்றிக் குடிக்க வேண்டும். ஏனெனில் அவை உணவுப் பொருட்களை எளிதில் உடைப்பதால், உடலில் சேரும் கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை குறைக்கும். 

** அதிலும் இந்த சுடு தண்ணீரை, சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும். எதற்கு எலுமிச்சையை சேர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால், எலுமிச்சையில் இருக்கும் பெக்டின் என்னும் நார்ச்சத்து, அடிக்கடி ஏற்படும் பசியைக் கட்டுப்படுத்தும்.

** இருமல் மற்றும் அதிக சளியின் காரணமாக டான்சில் மிகவும் வலியோடு இருக்கும். அவ்வாறு வலி ஏற்படும் போது சுடு நீரை குடித்தால், தொண்டை வலி குறைந்து, நீர்மமாக இருக்கும் சளி சற்று கெட்டியாகி, எளிதில் வெளியேறிவிடும்.

** சுடு தண்ணீரையோ அல்லது ஏதேனும் சூடான உணவுகளையோ சாப்பிடும் போது, அதிகமாக வியர்க்கும். ஏனெனில் சூடான பொருள் உடலில் செல்லும் போது, உடல் வெப்பநிலை அதிகரித்து, உடலை குளிர்ச்சியாக்க வியர்க்கிறது. வியர்ப்பதால் சருமத்தில் இருக்கும் செல்களில் உள்ள அதிகமான தண்ணீர் மற்றும உப்பு, உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios