Asianet News TamilAsianet News Tamil

தினமும் மிச்சமான உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுகிறீர்களா? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சனை வந்திருக்குமே...

Do you eat daily foods in the fridge? So you have this problem ...
Do you eat daily foods in the fridge? So you have this problem ...
Author
First Published Mar 30, 2018, 1:26 PM IST


இன்று பெரும்பாலான குடும்பத்தினர் சமைத்து மிஞ்சிய உணவை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் சூடேற்றி உண்கின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் கெட்டு ஏராளமானr பிரச்சனைகளைத் தான் தரும்.

உணவை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து பதப்படுத்தும்போது, சமைத்த உணவில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி தொடர்ந்து இருப்பதோடு, அதில் உள்ள அசிட்டிக் அளவு இன்னும் அதிகரிக்கும். இப்படிப்பட்ட உணவை உட்கொண்டால், அசிடிட்டி பிரச்சனையை சந்திக்க வேண்டிவரும்.

சமைத்து எஞ்சிய உணவை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, உணவில் உள்ள கிருமிகள் ஃப்ரிட்ஜில் உள்ள இதரை உணவுப் பொருட்களை தாக்கும் அபாயம் அதிகளவில் உள்ளது. இதனால் இதை சாப்பிடும் குடும்பத்தினரை எளிதில் நோய்வாய்ப்பட வைக்கும்.

உணவை சமைத்து அதனை உட்கொண்டபின் தான் ஃப்ரிட்ஜில் வைப்போம். குறிப்பாக வெப்பமாக இருக்கும்போது அதனை ஃப்ரிட்ஜில் வைக்கமாட்டோம். நன்கு குளிர்ந்தபின் தான் வைப்போம். இப்படி செய்வதால் பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் உணவை முழுமையாக பாழாக்கிவிடும். பின் என்ன பல்வேறு வயிற்று பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது தான்.

அடுப்பை அதிகமான தீயில் வைத்து சமைக்கும்போது சமைத்த உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். அதிலும் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் மீண்டும் சூடேற்றும் போது, உணவில் உள்ள சத்துக்கள் முழுமையாக நீங்கி, அதனை சாப்பிடுவதே வீணாகிவிடும். எனவே முடிந்த வரை சமைத்த உணவை அப்போதே சாப்பிட்டு விடுங்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios