உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்காக தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி "தோப்புக்கரணம்" போடுங்கள்.

பள்ளிகளில் தோப்புக்கரணம் ஏன்?

இடது கையை மடக்கி, இடது கை பெருவிரலால் வலது காது மடலின் நுனியைப் பிடித்துகொண்டு, வலது கையை மடக்கி, வலது கை பெருவிரலால், இடது காது மடலின் நுனியைப் பிடித்துக்கொண்டு, இரு கால்களையும் மடக்கி, முதுகை வளைக்காமல் நேராக, உட்காரும் நிலையில், இந்த தோப்புக்கரணம் போட வேண்டும்.

எத்தனை முறை?

அது ஆசிரியரின் விருப்பத்தைப் பொறுத்தது, ஆனாலும், அவர் சொல்லும்வரை நிறுத்தக்கூடாது. பொதுவாக எல்லோரும், படிக்காத மாணவர்களுக்கு இது ஒரு தண்டனையே, என நினைப்பார்கள், அது தவறு, மாறாக, அந்த மாணவர்களே, பின்னர் வகுப்பில் முதல் மாணவர்களாக வரவேண்டும், அதற்காகவே, ஆசிரியர்கள் நல்ல எண்ணத்தில், அதை செய்யச்சொன்னார்கள்.

அப்படியென்ன தான் நன்மைகள் இருக்கு இந்த தோப்புக்கரணத்தில்?

மந்தமான மனநிலையுள்ள மாணவர்களின் மூளை செயல்திறன், அவர்கள் காது நுனிகளில் தொடுதல் மூலமான பயிற்சிகளினால், மூளை நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் சக்தி, ஞாபக சக்தி, அதிகரிக்கிறது.

தொடர்ச்சியாக செய்யச்செய்ய, மூளை, சுறுசுறுப்படைகிறது, விழிப்படைந்த நினைவு செல்களின் ஆற்றலால், மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கி, அவர்கள் பாடங்களில் சிறப்பான விகிதத்தில் தேர்ச்சி ஆகின்றனர்.

மேலும், செயல்திறன் மிக்க மூளையின் ஆற்றல் மூலம், மாணவர்களின் தேவையற்ற எண்ணங்கள் நீங்கி, அவர்களின் இலட்சியக்குறிக்கோளில் இலக்கை அடைய, தினசரி அவர்கள் செய்யும் தோப்புக்கரணம் உதவிசெய்கிறது. இதற்காகத்தான் ஆசிரியர்கள், மந்தமான மாணவர்களை, அறிவாற்றல்மிக்க மாணவர்களாக ஆக்கவே, தோப்புக்கரணம் செய்யச் சொன்னார்கள்.

மேலும், ஆசிரியர்கள், ஆர்வமில்லாத மாணவர்களை, சமயத்தில் காதுகளைப் பிடித்துத் திருகுவார்கள். அதுவும், இதே பலன்களுக்காகத்தான் செய்தார்கள். இப்போது சொல்லுங்கள், தோப்புக்கரணம் ஒரு திறவுகோல்தானே, மனிதனின் மந்தநிலையை நீக்கி, அவனுக்கு ஊக்கமும் உற்சாகமும் தர, முன்னோர் விட்டுச்சென்ற வரம்.

தோப்புக்கரணம் பெரியவர்களுக்கு என்ன நன்மைகள் செய்யும் என்றால், தினமும் அதிகபட்சம் ஐந்து நிமிட நேரம் தோப்புக்கரணம் செய்துவந்தால், மூளைக்கு இரத்த ஓட்டம் சீராகச் சென்று, உடலின் ஆற்றல்நிலை தூண்டப்பட்டு, ஞாபகசக்தி அதிகரிக்கும், உடலில் புத்துணர்ச்சியும், செயல்களில் ஊக்கமும் உண்டாகும். மனதில் ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு விலகும், மேலும், உடல் கை கால் தசைகள் எல்லாம் இறுகி, உடல் வலுவாக விளங்கி, ஆரோக்யமாக வாழலாம்.

எல்லோருக்கும் அவசியம், நினைவாற்றல் குறைந்த மாணவர்கள் படிப்பில் கோட்டை விடுகின்றனர், நடுத்தர வயதினரும், நினைவாற்றல் குறைபாடு காரணமாகவே, தினசரி வாழ்வில் பல இன்னல்களை, சந்திக்க நேரிடுகிறது. இதைப்போக்க என்ன செய்யவேண்டும்?

அட தினமும் பத்து நிமிடம் தோப்புக்கரணம்  போடுங்கள். அப்புறம் பாருங்க ரிசல்ட்டை...