Asianet News TamilAsianet News Tamil

மன அழுத்தத்தை போக்க இனி மருந்து, மாத்திரைகள் வேண்டாம்! பூண்டு போதும்...

Do not take medication any longer to get depressed do not pills Garlic is enough ...
Do not take medication any longer to get depressed do not pills Garlic is enough ...
Author
First Published Jun 29, 2018, 2:45 PM IST


மன அழுத்தத்தை போக்க மருந்து, மாத்திரைகளுக்கு பதிலாக பூண்டு பயன்படுத்தலாம்.

** பசும்பாலை காய்ச்ச வேண்டும். ஒரு டம்ளர் பாலுக்கு பத்து பல் பூண்டுகள் சேர்க்க வேண்டும். பாலில் சிறிது நேரம் பூண்டு வேக வேண்டும். இவ்வாறு வேகும் போது பூண்டில் உள்ள அல்லிஸின் என்ற வேதிப்பொருள், சல்பர் பாலில் கலந்து விடுகிறது.

** பூண்டின் மருத்துவ குணம் பாலில் இறங்கியதும், இந்த பால் கசக்கும். இந்த பாலில் உள்ள பூண்டுகளை தனியே எடுத்து சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிட முடியவில்லை என்றால் பாலுடனே சேர்த்து குடித்து விடுவது நல்லது.

** இந்த பாலில் இனிப்பு சுவைக்காக சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை ஆரோக்கியமற்றது என கருதினால், பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம். பனங்கற்கண்டை வாங்கும் போது தரமானதாக பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.

** பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய இந்த பனை வெல்லம் மிகவும் ஆரோக்கியமானது. இதனை சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாம். சர்க்கரை சேர்த்து பருகுவதை விட இவ்வாறு பருகுவது சிறந்தது.

** இந்த பாலை தினமும் இரவு பருகுவதால் இரத்த அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற தீராத நோய்களும் கூட தீரும். ஆங்கில மருத்துவத்தில் வாழ்நாள் முழுவதும் இவற்றிற்கு மருந்து சாப்பிட வேண்டும். ஆனால் இதில் அவ்வாறு இல்லை. நீங்கள் உண்ணும் உணவே மருந்தாக அமைவதால், பக்கவிளைவுகளும் இல்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios