Asianet News TamilAsianet News Tamil

வீட்டு ஃபிரிட்ஜில் இந்த பழங்கள், காய்கறிகளை வெச்சிடாதீங்க; அப்புறம் அவ்வளவுதான்…

Do not overdo these fruits and vegetables in the home sprint And thats all ...
Do not overdo these fruits and vegetables in the home sprint; And that's all ...
Author
First Published May 26, 2017, 1:04 PM IST


நாம் பல்பொருள் அங்காடியில் வாங்கும் பல பொருள்களை நாள்பட உபயோகிக்க என்று ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கிறோம். ஆனால், எந்தப் பொருள்களை வைக்க வேண்டும், எத்தனை நாள்கள் வரை வைத்திருக்கலாம் என்பதை அறியாமல், அந்தப் பொருளையும் கெடுத்து, அதன் மூலம் நம் உடல்நலனையும் கெடுத்துக் கொள்கிறோம்.

வீட்டு ஃபிரிட்ஜில் இந்த பழங்கள், காய்கறிகள், வைக்க வேண்டாம்.

வெங்காயம்

ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாதது வெங்காயம். குளிரில் தானும் கெட்டு ஃபிரிட்ஜையும் கெட்ட நாற்றம் உள்ளதாக மாற்றிவிடும். மேலும், ஃபிரிட்ஜில் இருக்கும் எல்லா உணவுகளையும் வெங்காய மணம் மணக்கும்படி மாற்றிவிடும். உலர்ந்த சூழலே வெங்காயத்துக்கு ஏற்றது. பேப்பர் பைகளில் வெங்காயத்தைப் போட்டு வைத்திருப்பதே போதுமானது. அதிக வெப்பமில்லாத இருண்ட சூழலில், வெங்காயத்தை வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் உருளைக்கிழங்குக்கு அருகே வைக்கக்கூடாது. உருளைக்கிழங்கில் இருந்து வெளியாகும் வாயுவும் ஈரப்பதமும் வெங்காயத்தை அழுகச் செய்துவிடும். கவனம்!

வாழைப்பழம்

ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாதது வாழைப்பழம். ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் அதிகப்படியான குளிரும் இருளும் வாழைப்பழத்தின் சத்தைக் கெடுப்பதோடு, அழுகவும் செய்துவிடும். திறந்த, உலர்ந்த இடங்களில் வாழைப்பழத்தை வைத்திருப்பதே நல்லது.

தேன்

இயற்கையிலேயே கெட்டுப்போகாத தன்மை கொண்ட தேனும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத ஒரு பொருள்தான். சாதாரண தட்பவெப்பநிலையில் இறுக மூடி வைத்தாலே தேன் அதன் சத்துக்களை பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடியது. ஆனால், ஃபிரிட்ஜில் குளிர்ந்த சூழலில் வைத்திருக்கும்போது அது தனது நிலையை மாற்றிக்கொண்டு, மணல்போலக் கடினமாகவும், சுவை மாறியும் போய்விடும். ஏறக்குறைய உபயோகிக்க முடியாத அளவுக்கு தேன் மாறிவிடும்.

அவகேடோ

அவகேடோ பழத்தையும் ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது. கடைகளில் வாங்கும்போது பழுக்காத நிலையில் இருக்கும் இந்தப் பழம், ஃபிரிட்ஜில் வைத்தால், பழுக்கவே பழுக்காது. மேலும், அதன் சுவையும் மாறிவிடக்கூடும்.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களும் ஃபிரிட்ஜில் வைக்கத் தோதானவை அல்ல. சாதாரண வெப்பநிலையே இந்தப் பழங்களைப் பழுக்கச் செய்துவிடும். அதிகக் குளிரான சூழல், இந்தப் பழங்களின் சிட்ரஸ் அமிலத்தை பாதித்து, சுவையை மாற்றிவிடும். மேலும், அதன் தோலை பாதித்து பளபளப்பையும் மங்கச் செய்துவிடும்.

ஸ்டோன் வகை பழங்கள்

ப்ளம், பீச், ஆஃப்ரிகாட், நெக்டாரின் போன்ற மேல்நாட்டு ஸ்டோன் வகைப் பழங்களுக்கும் ஃபிரிட்ஜ் ஒத்து வராது. வாங்கும்போது அதிகம் பழுக்காதநிலையில் இருக்கும் இவற்றுக்கு சாதாரணச் சூழல்தான் ஏற்றது. குளிரில் வைத்திருந்தால் அதிகம் பழுக்காது; சுவை கூடாமல் போய்விடும்.

மூலிகைகள்

மூலிகைகளையும் கீரைகளையும் ஃபிரிட்ஜில் வைத்து வீணடிக்கக் கூடாது, ஏனென்றால், அவற்றின் சத்துகள் குறைந்துபோய்விடும். சாதாரணச் சூழலில், நீர் நிறைந்த பாத்திரத்தில் இவற்றின் தண்டுப் பகுதியை நீரில் மூழ்கி இருக்குமாறு வைத்திருந்தாலே போதும், தளதளவென்று உலர்ந்து போகாமல் இருக்கும்.

பெர்ரி வகைப் பழங்கள்

சாதாரண தட்பவெப்பத்திலேயே நல்லநிலையில் இருக்கும் இந்தப் பழங்கள் நல்ல சுவையைத் தரக்கூடியவை. அதிக நேரம் குளிரில் வைக்கப்பட்டால், இதன் சுவையும் கெட்டு வடிவமும் மாறிவிடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios