Asianet News TamilAsianet News Tamil

Bone Strength: எலும்புகளின் வலிமையை பாதுகாக்கும் சைக்கிளிங்!

35 வயதிற்கு மேல் சென்றால், எலும்புகளில் வளர்ச்சி என்பதே இருக்காது. எலும்புகளின் வலிமை குறையத் தொடங்கி விடும்.

Cycling preserves bone strength
Author
First Published Nov 15, 2022, 6:24 PM IST

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு, எலும்புகளின் ஆரோக்கியமும் மிக முக்கியம். எலும்புகளின் அடர்த்தி 35 வயதுக்கு மேல், நாட்கள் செல்ல செல்ல குறையத் தொடங்கும். எலும்புகளின் வளர்ச்சி 30 வயது வரையிலும் இருக்கும். அடுத்த 5 வருடங்களுக்கு முழு வளர்ச்சியுடன் இருக்கும். 35 வயதிற்கு மேல் சென்றால், எலும்புகளில் வளர்ச்சி என்பதே இருக்காது. எலும்புகளின் வலிமை குறையத் தொடங்கி விடும்.

எலும்புகளின் வலிமை

கால்சியம் உற்பத்தியை துாண்டுவதில், 'ஈஸ்ட்ரோஜென்' எனும் ஹார்மோன் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் சுரக்கும், 'ஈஸ்ட்ரோஜென்', மாதவிடாய் நிற்கும் பருவத்தில் அல்லது நின்ற பிறகு குறைவதால், எலும்புகளின் வலிமை குறைந்து விடுகிறது. இதன் காரணமாக, 50 வயதிற்கும் மேற்பட்ட பெண்களுக்கு, மிக எளிதாக எலும்புகள் உடையக் கூடும். இதனால், ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் வருவதற்கான வாய்ப்பு, ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு 4 மடங்கு அதிகமாக உள்ளது.

Late Dinner: இரவில் உணவை தாமதாமாக சாப்பிடுபவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான்!

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு முன்பாக மாதவிடாய் நின்றவர்கள், வேறுசில காரணங்களால் கர்ப்பப்பை மற்றும் கருக்குழாய்களை அகற்றியவர்களுக்கும் எலும்புகளின் வலிமை குறையத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தசைகளின் வலிமை குறைவாக இருக்கும் பெண்கள், தினசரி உடற்பயிற்சி செய்யாதவர்கள் மற்றும் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களுக்கு இப்பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. இப்பிரச்சனை உள்ளவர்கள் சிலநேரங்களில், தடுமாறி கீழே விழுந்தாலே எலும்புகள் உடைந்து விடும் அபாயம் உள்ளது.

தசைகள் வலிமை இழப்பதன் காரணமாக முதுகு வலி, எலும்புகள் மற்றும் தசைகளில் வலி வரும். நடை பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது மற்றும் ஜாகிங் போவது என ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை தினந்தோறும் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் செய்வதால், எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமைக்கு உதவியாக இருக்கும்.

இரத்தப் பரிசோதனை, கால்ஷியம், மற்றும் விட்டமின் - D பரிசோதனைகளை செய்து, அதன் அளவுகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். எலும்புகளின் அடர்த்தியை அறிந்து கொள்ளவும், அதற்குரிய பரிசோதனை இருக்கிறது. இதனையும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். 

அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களை காட்டிலும், சைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios