Buffalo Ghee Vs Cow Ghee: பசு நெய் vs எருமை நெய்: இரண்டில் எது நல்லது?

Buffalo Ghee Vs Cow Ghee: பல காலமாக மஞ்சள் நிற நெய் நல்லதா? அல்லது வெள்ளை நிற நெய்யை நல்லதா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இந்த கேள்விக்கான பதிலை இப்பதிவில் காண்போம்.

Cow Ghee vs Buffalo Ghee: Which is Better?

பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று தான் நெய். நல்ல கொழுப்பு, புரதச்சத்து வைட்டமின் ஏ, பி மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ள நெய், உங்கள் சருமம், முடி, இதய ஆரோக்கியம், செரிமானக் கோளாறுகளுக்கான தீர்வாக அமைகிறது. இருப்பினும் பல காலமாக மஞ்சள் நிற நெய் நல்லதா? அல்லது வெள்ளை நிற நெய்யை நல்லதா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இந்த கேள்விக்கான பதிலை இப்பதிவில் காண்போம்.

மஞ்சள் நிற நெய் vs வெள்ளை நிற நெய்

எருமைப்பாலில் இருந்து தயாரிக்கப்படுவது வெள்ளை நிற நெய் ஆகும். எருமைப் பால் நெய், எலும்புகளின் அடர்த்தி, ஆரோக்கியம், உடல் எடை அதிகரிப்பு மற்றும் கார்டியோ வாஸ்குலார் தசை செயல்பாடுகள் போன்ற உடல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.

பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படுவது மஞ்சள் நிற நெய் ஆகும். பசு நெய் உடல் எடையைக் குறைப்பதற்கும், ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமனைக் குறைப்பதற்கும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உள்ள செரிமான கோளாறுகள் சீர் செய்வதற்கும் பயன்படுகிறது.

ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்து

ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் அம்ரீன் ஷேக் கருத்துப்படி, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற நெய்யை ஒப்பிடும் போது, வெள்ளை நிற நெய்யில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும். பசும்பாலில் உள்ள A2 புரதம் எருமைப்பாலில் இல்லை. எனவே பசு நெய்யில் கிடைக்கும் புரதம், எருமை நெய்யில் கிடைக்க வாய்ப்பில்லை. இந்த A2 புரதம் நாட்டு பசுக்களில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யில் மட்டுமே கிடைக்கும். அதே சமயத்தில், எருமை நெய்யும் பசு நெய்யை விட ஊட்டச்சத்து ரீதியாக எந்த விதத்திலும் குறைந்ததில்லை. எருமைப் பால் நெய்யில் மெக்னீசியம் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற மினரல்கள் அதிகமாக நிறைந்துள்ளன. பசு நெய்யை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி உங்களுடைய கொலஸ்ட்ரால் அளவுகளையும் சரியான அளவில் நிர்வகிக்க உதவுகிறது.

வெறும் 3 பொருட்களை வைத்து ஈஸியான வற்றல் செய்யலாம் வாங்க!

உணவியல் நிபுணர் டாக்டர் உஷாகிரண் சிசோடியா கருத்துப்படி, குறிப்பிட்ட உடல்நலத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நெய் வகையை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறார். பசு நெய் மற்றும் எருமை நெய் ஆகிய இரண்டிலும் கொழுப்புச்சத்து நிறைந்துள்ளதால், இவை உங்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தை மேம்படுத்துகிறது. ஆனால், இரண்டையும் ஒப்பிட்டால், வெள்ளை நிற நெய் சிறந்தது. உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு மட்டுமின்றி, உடலில் உற்பத்தியாகும் நன்மை அளிக்கும் பாக்டீரியாக்களின் பெருக்கத்தை அதிகப்படுத்துவதற்கும் வெள்ளை நிற நெய் உதவுகிறது.

சருமம், கண் பார்வை மற்றும் மூளை செயல்பாடுகளுக்கு வைட்டமின் ஈ கரோட்டின் நிறைந்துள்ள மஞ்சள் நிற பசு நெய் நன்மை அளிக்கிறது. எலும்புகளுக்கும், மூட்டுகளில் உள்ள இணைப்புகளுக்கும் நெய் சாப்பிடுவதால் பலம் கிடைக்கும். மேலும், நெய் உங்கள் சருமத்தின் வறட்சியைத் தடுத்து, இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios