சாராயம் குடிக்கும் விஷயத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது வேதனையான ஒன்று.

சாராயம் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிக பாதிப்பை உண்டுபண்ணும்.

சாராயம் குடிக்கும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள்

உடல் எடை கூடுவது, கல்லீரல் பாதிப்பு, இதயநோய், மார்பக புற்றுநோய், வயிற்றுப்புண், கண்பார்வை மழுங்குதல் போன்ற பல வியாதிகளுக்கு வழிவகுக்கிறது குடி.

அந்தஸ்துள்ள பெண்கள் மட்டுமில்லாது அடிமட்டத்திலிருக்கும் பெண்களும் குடிக்கிறார்கள். கர்ப்பிணி பெண்கள் சாராயம் குடித்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு ஏற்படும். தொடர்ந்து குடிக்கும் பெண்களுக்கு குழந்தை உண்டாகும் வாய்ப்பு மிக அரிது.

போதையினை உடலின் எந்த பாகமும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை. அதனால் உடல் பல விதத்திலும் கட்டுப்பாடின்றி இயங்கி, தள்ளாட்டம் அடைந்து, மூளை சோர்வடைகிறது.

உடலுக்கு வேகமும் ஆவேசமும் பன்மடங்கு அதிகமாகிறது. இதனால் உடலில் சேர்ந்திருக்கும் வைட்டமின், மினரல்கள் அதீதமாக செலவாகி உடல் சோர்ந்து உதறல் ஆரம்பமாகிறது.

மன அழுத்தம், இதய துடிப்பு குறைவது, இயல்பை மீறி மூச்சு வாங்குவது, நரம்பு தளர்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. உடலில் பொட்டாசியம், மெக்னீஷியம் குறைவதால் பலவீனம், பசியின்மை ஆகியவை உண்டாகிறது.

குறிப்பாக மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் பிறரை காட்டிலும் குடிக்கும் பெண்களுக்கு அதிகமாக உள்ளது. சமூகவிரோதிகளால் தவறாக நடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கும் அவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள்.

படிப்பில் அக்கறையின்மை, கவனக்குறைவு, மிகுதியான கோபம், சிடுசிடுப்பு, மனச்சோர்வு, உடற்சோர்வு, திடீரென்று வியர்த்தல், நா வறட்சி, தலைவலி, கண்கள் சிவந்து காணப்படுவது, உடல்மெலிவு அல்லது பருமனாவது, தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுதல், மேலும் மாதவிடாய் சிக்கல்கள் என்று நீண்ட பட்டியல் நீளும்.