வியக்கவைக்கும் அளவுக்கு நன்மைகளை வாரி வழங்கும் விளக்கெண்ணெய்..!!
ஆமணக்கு எண்ணெய் பார்ப்பதற்கு ஒளி ஊடுவகூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். முன்னதாக பாரம்பரிய மருத்துவ முறைகளில் அதிகளவில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில், இதனுடைய பயன்பாடு மற்றும் நன்மைகள் பலருக்கும் தெரியவில்லை.
ஆமணக்கு செடிகளுடைய விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தான் விளக்கெண்ணெய். இது ஆமணுக்கு எண்ணெய் என்றும் குறிப்பிடப்படுகிறது. முதலில் இந்தச் செடி கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றியதாகவும், அதையடுத்து புலம்பெயர்ந்த மக்களுடன் சேர்ந்து இந்தியா வந்தடைந்ததாக சொல்லப்படுகிறது. எனினும் இது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. குப்பை மேடு, கைவிடப்பட்ட நிலப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பராமரிப்பு இல்லாமல் வளரும் தன்மை கொண்டது. இந்த எண்ணெய் பெரும்பாலும் ஒப்பனை பொருட்களை தயாரிப்பதற்கும் மற்றும் மருத்துவ தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆமணக்கு எண்ணெய் பார்ப்பதற்கு ஒளி ஊடுவகூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். முன்னதாக பாரம்பரிய மருத்துவ முறைகளில் அதிகளவில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில், இதனுடைய பயன்பாடு மற்றும் நன்மைகள் பலருக்கும் தெரியவில்லை.
செரிமானத்தை துரிதப்படுத்துகிறது
இதை உட்கொள்ளும் போது சிறுகுடலில் ரிசினோலிக் எனப்படும் அமிலமாக மாறுகிறது. இதன்மூலம் செரிமானம் துரிதப்பட்டு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும். ஆமணக்கு எண்ணெய் மற்றும் ரிசினோலிக் அமிலம் ஆகியவை சருமத்தின் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. மேலும் சில சமயங்களில் டெர்மடோசிஸ், சொரியாசிஸ் மற்றும் முகப்பரு உள்ளிட்ட தோல் பிரச்னைகளை தீர்வாகும் விளக்கெண்ணெய் அமைகிறது. இது கண் இமை மற்றும் தலையில் முடி வளர்வதை ஊக்குவிக்கவும் செய்கிறது.
மலச்சிக்கல் நீங்குகிறது
செரிமானத்தை துரிதப்படுத்துவதால், இதற்கு இயற்கையாகவே மலச்சிக்கலை நிவர்த்தி செய்ய முடியும். இதை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது வெப்பத்தை உருவாக்கி செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. சரியான குடல் இயக்கத்திற்கு உதவுவதன் மூலம் செரிமான அமைப்பை சுத்தப்படுத்துகிறது. அதனால் உடனடியாக மலம் சார்ந்த பிரச்னைகள் நீங்குகிறது. பிறந்த குழந்தைகள் பல நாட்களாக மலம் கழிக்காமல் இருந்தால், குழந்தைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் வழங்கப்படும் முறை நம்முடைய பாரம்பரியத்தில் இருந்து வருகிறது.
காலையில் இருந்து இரவு வரை- என்ன உணவு சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்..?
எலும்பு வலு பெறும்
மூட்டு வலிகளுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரிய மருத்துவ முறையில், பழங்காலத்திலிருந்தே ஆமணக்கு எண்ணெய் கீல்வாதம் வலி, வீக்கம் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆமணக்கு எண்ணெயில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது மசாஜ் செய்வதற்கு சிறந்ததாக உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் ஆமணக்கு எண்ணெய் மற்றும் சூடான தண்ணீர் பேக் கொண்டு மசாஜ் செய்தால் பிரச்னை தீர்ந்துவிடும். குறைந்தது ஒரு வாரம் தொடர்ந்து இதை செய்து வந்தால், கொஞ்சம் கொஞ்சமாக வேதனை நீங்குவதை நீங்கள் உணரலாம்.
முடி வளர ஊக்குவிக்கும்
நீண்ட மற்றும் பளபளப்பான கூந்தல் பெறுவதற்கு ஆமணுக்கு எண்ணெய்யை பயன்படுத்துவது நல்ல தீர்வை தரும். குறைந்தது வாரத்துக்கு இருமுறை ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்து, ஒரு மணிநேரம் ஊறவிட்டு, பிறகு ஷாம்பூ போட்டு குளித்தால், முடி வலுபெறும் மற்றும் பளபளப்பாக இருக்கும். ஆமணக்கு எண்ணெயில் உள்ள ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் முடியின் வேர்களுக்குச் சென்று இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த எண்ணெய்யில் பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதனால் உச்சந்தலையில் இதை நன்றாக் தேய்து சுத்தம் செய்யும் போது, பொடுகுத் தொல்லை ஏற்படாமல் தடுக்கிறது.
உங்களை மட்டுமே குறிவைத்து கொசு கடிப்பதாக தோன்றுகிறதா? அப்போ இதப்படிங்க...!!