காலையில் இருந்து இரவு வரை- என்ன உணவு சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்..?

உணவு எப்போதும் சாப்பிடக்கூடிய ஒன்றுதானே, அதற்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் இருக்கும். இதுபோன்ற எண்ணங்கள் தான் தவறான உணவுப் பழக்கங்களுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. அதற்காக நாம் உணவுக் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியம்.
 

right time to should eat the food and kind of food have to consume on daily basis

உணவு தினமும் சாப்பிடக் கூடிய ஒன்று தான் என்பதால், அது மிகவும் எளிதாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இப்படிப்பட்ட எண்ணங்களுடன் நாம் சாப்பிடும் நேரத்தில் செய்யும் தவறுகள், எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. அலுவலக வேலைப்போக, ஊர் சுற்றும் நேரம் போக, தூங்கும் நேரம் போக, பிரியமானவர்களுடன் இருக்கும் நேரம் போக சாப்பாட்டுக்கு நேரம் ஒதுக்குகிறோம். இதனால் உணவு உட்கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் மாறுபாடு காண்கிறது. சாப்பிடும்போதும் சரி, சாப்பாட்டுக்கு முன்பும் சரி, அவை இரண்டுக்குமான இடைவெளியைப் பொறுத்து தான் ஆரோக்கியம் நம் உடலுக்கு கிடைக்கிறது. அதனால் உணவும் அதை உட்கொள்ளும் நேரமும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இயற்கையுடன் பிணைந்த தொடர்பு

சாப்பாடும் சாப்பாட்டு நேரமும் இயற்கை செயல்முறையுடன் தொடர்பை கொண்டுள்ளன. உடலுக்கு நிலையான உணவு நேரம் என்று உள்ளது. நமது வளர்ச்சிக்கும் ஆரோக்கிய மேம்பாட்டுக்கும் தேவையானது உணவுப் பழக்கம். அதனால் தான் உடலில் பசி ஏற்படுகிறது. அதை உணவை சாப்பிடும் உணர்வுக்கு நம்மை இட்டுச்செல்கிறது. ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் உணவை உண்டு வந்தால் எடைப் பராமரிப்பு, உடலுக்கு வேண்டிய ஆற்றல் உள்ளிட்ட நன்மைகள் உங்களுகு கிடைக்கும்.

காலை உணவு

எப்போதும் காலை உணவை தவிர்ப்பது கூடாது. காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நம்மை அன்றைய நாள் முழுவதும் நம்மை ஆற்றலுடன் வைத்திருக்க உதவுகிறது. எப்போதும் காலைவேளையில் மென்மையான உணவுகளை தான் சாப்பிட வேண்டும். அதன்படி நார்ச்சத்து கொண்ட, சத்துமிக்க, சூடான உணவுகள் காலை உணவுகளுக்கு ஏற்றவையாகும். காலை 7-ல் இருந்து 8 மணிக்குள் உணவு சாப்பிட்டுவிடுவது நல்லது. அது முடியாவிட்டால் காலை எழுந்ததும் 1 மணிநேரத்துக்குள் உணவை சாப்பிட்டு விடுவது நல்லது. 

மதிய உணவு

உடல் உழைப்பின்றி பணியாற்றும் பலருக்கு பசி எடுப்பது குறைவு தான். அவர்களில் பெரும்பாலானோர் காலை உணவை தவிர்த்துவிடுபவர்களாகவே உள்ளனர். இதனால் மதிய உணவை சாப்பிட வேண்டிய கட்டுப்பாடு அவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் கிடைத்ததை சாப்பிடுகின்றனர்.ஆனால் எப்போதும் மதிய நேரங்களில் புரதங்கள், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்ட உணவுகளைத் தான் உட்கொள்ள வேண்டும். மதிய உணவு எப்போதும் ஊட்டச்சத்தை அளிப்பதாக இருக்க வேண்டும். குறைந்தது காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் 4 மணிநேர இடைவெளி இருப்பது அவசியம்.

மழையில் குளித்தால் உடலுக்கும் கேசத்துக்கு பலன் கிடைக்குமா? ஆய்வு சொல்வது என்ன..??

பசி எடுத்தால் இதை செய்யுங்கள்

காலை உணவு சாப்பிட்டு முடித்தாலும், மதிய உணவுக்கு இடையில் திடீரென்று பசி எடுக்கும். அப்போது உங்களிடம் நட்ஸ், பழங்கள் மற்றும் வேகவைத்த பருப்புகள் இருந்தால் நல்லது. காலை உணவுக்கு பிறகு நொறுக்குத் தீனி இடையில் சாப்பிட வேண்டும் என்றால் 11 மணியில் இருந்து 11.30 வரை பொருத்தமான நேரமாகும். அதேபோன்று மதிய உணவுக்கு பிறகு பசி எடுத்தால், மாலை 4 மணி முதல் 4.30-க்குள் ஏதாவது சாப்பிடலாம். பெரும்பாலும் மதிய உணவுக்கு பிறகு பழச்சாறு குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. முடிந்தவரையில் சக்கரை மற்றும் ஐஸ் இல்லாமல் பழச்சாறு குடிக்க பழகிக்கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு மிகவும் விரைவாக சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.

வெறும் வயிற்றில் பச்சையாக ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள்- அப்புறம் அதிசியம் நடக்கும் பாருங்கள்..!!

இரவு உணவுக்கான நேரம்

காலையில் சாப்பிடுவது அன்றைய நாளுக்கான ஆற்றலை முடிவு செய்கிறது. அதேபோன்று இரவு உணவு என்பது, அன்றைய நாளுக்கான நிம்மதியான உறக்கத்தையும், அடுத்த நாளுக்கான சுறுசுறுப்பையும் வழங்குகிறது. முடிந்தவரையில் மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டு முடித்திடுங்கள். அதையடுத்து இரண்டு மணிநேரம் இடைய்வெளி எடுத்துக் கொண்டு உறங்கச் செல்லுங்கள். இரவு 10 மணிக்கு மேல் இரவு உணவு சாப்பிடுபவராக நீங்கள் இருந்தால், பிற்காலத்தில் உங்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளை யாராலும் தடுக்க முடியாது. எப்போதும் இரவு உணவு இலகுவாக இருப்பது அவசியம்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios