Cashionut fruit has more vitamin than orange

உங்களுக்கு முந்திரியைப் பற்றி தெரிந்திருக்கும். முந்திரி பழத்தைப் பற்றி கேள்விப் பட்டதுண்டா?

முந்திரிப் பழத்தை சாப்பிடுவதால், நம்ப முடியாத பல நன்மைகள் கிடைக்கும்.

முந்திரியை எப்படி விரும்பி சாப்பிடுகிறோமோ, அதேப்போல் முந்திரிப் பழத்தை சாப்பிட முடியாது. ஏனென்றால் இதனை அப்படியே அதிக அளவில் சாப்பிட்டால், தொண்டை கரகரப்பு ஏற்படும்.

முந்திரி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...

முந்திரிப் பழத்தில் உள்ள சத்துக்கள்

புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

வைட்டமின் சி பொதுவாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் தான் அதிகம் இருக்கும். ஆனால் அதை விட 5 மடங்கு அதிகமாக ஒரு முந்திரி பழத்தில் உள்ளது.

நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள், முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதனை குணமாக்கலாம்.

ஸ்கர்வி முந்திரி பழத்தை சாப்பிட்டால், வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி என்ற நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

24 மணிநேரம் முந்திரி பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணிநேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லையெனில் அழுகி விடும். அதனால் தான் இப்பழம் இந்தியாவில் அதிகம் விற்கப்படுவதில்லை. மேலும் இப்பழத்தின் ஜூஸானது பிரேசிலில் மிகவும் பிரபலமானது.