நாயின் உமிழ்நீரில் இருந்து ரேபிஸ் பரவலாம். நாயின் உமிழ்நீரில் ரேபிஸ் கிருமிகள் உள்ளன. ஆனால், இது உங்கள் உடலில் ஒரு காயம், கீறல் ஏற்பட்டிருந்தால் ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய் அந்த இடத்தை நக்கினால், ரேபிஸ் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
நாய்கள் கடித்து மக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாய் கடித்தால் மனிதர்களுக்கு நாய்வெறி ஏற்படுகிறது.சிலர் தங்கள் உயிரை இழக்கின்றனர். ஆனால், நாய்களை நேசிப்பதும் அவற்றுடன் வாழ்வதும் சிலரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டடு. எனவே, கவனமாக இருப்பது மிகவும் முக்கியம். மக்கள் நாய்களுடன் விளையாட விரும்புகிறார்கள். ஆனால், இந்த நேரத்தில் ஒரு நாய் உங்களை நக்கினால், உங்களுக்கு நாய்வெறி வருமா?

வெறிநாய்க்கடி என்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாக்கும் ஒரு கொடிய நோய். நோய் உங்களைப் பிடித்தவுடன், உயிர்வாழ்வது கஷ்டமாகி விடுகிறது. வெறிநாய்க்கடி மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாக மருத்துவர்களும் கருதுகின்றனர். வெறிநாய்க்கடி தொற்று பெரும்பாலும் நாய், பூனை அல்லது பாதிக்கப்பட்ட எந்த விலங்கின் கடி மூலம் பரவலாம்.
ராஜஸ்தானின் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் என்.ஆர். ராவத் கூறுகையில், ‘‘தடுப்பூசி போடப்பட்ட நாய் உங்களை நக்கினால், பீதி அடையத் தேவையில்லை. ஆனால், அந்த நாய் பாதிக்கப்பட்டிருந்தால், ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி எதுவும் போட்டிருக்கப்படவில்லை என்றால், நாயின் உமிழ்நீரில் இருந்து ரேபிஸ் பரவலாம். நாயின் உமிழ்நீரில் ரேபிஸ் கிருமிகள் உள்ளன. ஆனால், இது உங்கள் உடலில் ஒரு காயம், புதிய கீறல் ஏற்பட்டிருந்தால் ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய் அந்த இடத்தை நக்கினால், ரேபிஸ் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். அதாவது, நேரடியாக நக்குவதன் மூலம் மட்டுமல்ல, காயம் நாயின் உமிழ்நீருடன் கலப்பதன் மூலமும் இந்த ஆபத்து அதிகரிக்கிறது.

எய்ம்ப்ஸ், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, பாதிக்கப்பட்ட நாயின் உமிழ்நீர் ஒரு நபரின் திறந்த காயம், கீறல், வாயின் உள் மேற்பரப்பில் வந்தால், ரேபிஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கலாம். ரேபிஸ் வைரஸ் இரத்தத்தில் நுழைய ஒரு வழி தேவை. இந்த வழியில் உமிழ்நீரால் பாதிக்கப்பட்ட ஒரு காயம், கீறல் அல்லது சளி சவ்வு மூலமும் பரவலாம்.
பாதிக்கப்பட்ட விலங்கு கடித்த பிறகு, ரேபிஸ் வைரஸ் முதலில் இரத்தம், திசுக்களில் நுழைந்து, பின்னர் நரம்புகள் வழியாக நரம்பு மண்டலம், மூளையை மெதுவாகத் தாக்குகிறது. வைரஸ் நரம்பு மண்டலத்திற்குள் நுழைந்தவுடன், 5 முதல் 15 நாட்களுக்குள் மரணம் ஏற்படுகிறது.
எந்த சூழ்நிலைகளில் ஆபத்து அதிகம்?
நாய் ரேபிஸால் பாதிக்கப்பட்டு உங்களை நக்கும்போது, உங்கள் உடலில் ஒரு கீறல் அல்லது காயம் ஏற்பட்டால் ஆபத்து அதிகம். நாய் உங்கள் உதடுகள், கண்கள் அல்லது வாய் அருகே நக்கினால் ஆபத்து அதிகம். உங்கள் உடலில் உமிழ்நீர் படிந்த பழைய காயம் இருந்தால் ஆபத்து அதிகம்.

பாதிக்கப்பட்ட நாயுடன் நீங்கள் தொடர்பு கொண்டால் என்ன செய்ய வேண்டும்?
சந்தேகத்திற்குரிய நாயின் உமிழ்நீர் உங்கள் கீறல் அல்லது காயத்தில் தடவப்பட்டிருந்தால், உடனடியாக சிகிச்சையைத் தொடங்குங்கள். பாதிக்கப்பட்ட பகுதியை ஓடும் நீரை கொண்டு சோப்புடன் குறைந்தது 15 நிமிடங்கள் கழுவ வேண்டும். கிருமி நாசினியான அயோடின் அல்லது ஸ்பிரிட் போன்வற்றை தடவலாம். தாமதமின்றி அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் அனைத்து விவரங்களையும் சொல்லுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்படி ரேபிஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள்.
