காலை எழுந்ததும் எதை சாப்பிடணும்.. முதல்ல சிறந்த காலை உணவை பத்தி தெரிஞ்சுக்கங்க..

தினமும் காலையில் எழுந்ததும் எந்த உணவுகள் உண்பது ஆரோக்கியம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

best breakfasts for health tamil

நாம் எழுந்ததும் காலையில் உண்ணும் உணவுகள் வயிற்றை தொந்தரவு செய்யாத எளிமையான உணவுகளாக இருப்பது அவசியம். ஏனெனில் வெறும் வயிற்றில் நம் குடலில் அமில சுரப்பு அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் முதல் உணவு குடலை பாதிக்காத அமில சுரப்பு கம்மியாக இருக்கும் உணவாக இருக்க வேண்டும். 

ஆரோக்கியமான உடல் நலத்திற்கு காலையில் வைட்டமின் சி- காணப்படும் உணவுகளை உண்ணலாம். ஏனெனில் வைட்டமின் சி- நம்முடைய வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, மூளைக்கும் தேவையான அளவு ஆக்சிஜனை அளிக்கக் கூடியது. இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் அன்றைய நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். 

சிலர் காலையில் எழுந்ததும் எலுமிச்சம் பழம் பிழிந்து அதனுடன் தண்ணீர் சேர்த்து அருந்துவார்கள். இது நம்முடைய காலை பொழுதை புத்துணர்வுடன் ஆரம்பிக்க உதவும். இது மட்டுமில்லாமல் நச்சு நீக்கியாக செயல்படும் புதினா, வெள்ளரிக்காய், ஆப்பிள் போன்றவற்றின் பழச்சாறுகளையும் காலையில் எடுத்துக் கொள்ளலாம். முட்டை, இட்லி, பால், பருப்பு வகைகள், சோயா பீன்ஸ் ஆகியவற்றையும் காலை உணவாக உண்ணலாம். இதில் காணப்படும் லைசின் எனும் புரதச்சத்து நம் உடலுக்கு நன்மை பயக்கும்.  

health morning foods

கவனம் மக்களே..!

முழுத் தானியங்களால் சமைக்கப்பட்டவையும் உடலுக்கு நல்லது. முளைகட்டிய பயிறை ஏதேனும் ஒரு சிற்றுண்டியுடன் எடுத்து கொள்ளலாம். வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது. 

இதையும் படிங்க: சூரிய ஒளியால் வைட்டமின் டி முழுமையா கிடைக்கும்.. அதை பெற சரியான நேரம் எது தெரியுமா?

பால் பொருள்கள் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்து நமது மூளை, நரம்பு மண்டலத்துக்கு ஊட்டம் அளித்து பலப்படுத்தும். காலையில் என்ன சாப்பிட்டாலும் சரி கூடவே ஏழைகளின் ஆப்பிளாக திகழும் தக்காளிப் பழத்தையும் உண்டுவிடுங்கள். ரொம்ப நல்லது. இதில் வைட்டமின் சி மிகுந்துள்ளது என்கிறார்கள். ஆனால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் தக்காளி பழத்தை உண்ண வேண்டாம்.  

இதையும் படிங்க: வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால்.. அடிக்குற வெயிலுக்கு உங்க கொழுப்பு வெண்ணெய் மாதிரி கரைஞ்சிடும்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios