வேர்க்கடலையை வறுத்தோ, வேக வைத்தோ சாப்பிடுவதால் அதன் சத்தும் அதிகமாகும். இதனால் இரண்டு முதல் நான்கு பங்கு உயிர்ச்சத்து அதிகமாகக் கிடைக்கிறது.

வேர்க்கடலையில் பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் எனப்படும் ரிபோப்ஃபிளேவின், நியாசின், தயாமின், பேண்டோதெனிக் ஆசிட், விட்டமின் பி6 மற்றும் போலேட் ஆகியன அடங்கியுள்ளன. இவை மூளையின் ஆரோக்கியத்துக்கும் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லவும் உதவுகின்றன.

வேர்க்கடலை எண்ணை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கரைத்து அன்றாடம் அருந்திவர சிறுநீர்ப்பை அழலையை போக்கி சிறுநீரை சிரமமின்றி கழிக்க உதவுவதோடு சிறு நீர்த்தாரை எரிச்சலையும் போக்கும்.

மேலும் மலச்சிக்கலை உடைத்து மிகத் தாராளமாக மலத்தை சுத்திகரிக்கச் செய்யும்.

வேர்க்கடலையை வேக வைத்தாகிலும் வாணலியில் இட்டு வறுத்தாகிலும் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் உடலை வளர்க்கும் உரமாக விளங்கும்.

வேர்க்கடலையைத் தோல் நீக்கி இடித்து மாவாக்கிப் பாலில் வேகவைத்துச் சாப்பிட்டு வருவதால் ஆண்மை அதிகரிக்கும்.

ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை எண்ணெய் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் பால்வினை நோயான கொனேரியா என்னும் ஒழுக்கு நோய் குணமாகும்.

சீனமக்கள் கடலை எண்ணெயை கொனேரியா நோய்க்கும், மூட்டுத் தேய்மானம், மூட்டுவலி ஆகியனவற்றுக்கும் தூக்கமின்மைக்கும் பயன் படுத்தலாம்.

ஒரு நாளைக்கு ஒரு பிடி வேர்க்கடலை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்கிறது.