இனிப்புச் சுவையை, ஆரோக்கியம் நிறைந்த பப்பாளி பழத்தினை போன்றே அதனுடைய விதைகளிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.

பப்பாளி விதைகளில் இருக்கும் நன்மைகள்

1.. பப்பாளி விதையில் இருக்கும் பெப்பைன் என்ற என்சைமைகள், நாம் சாப்பிடும் உணவுகளின் முழுமையான ஜீரணத்திற்கு உதவுகிறது.

2.. பப்பாளி விதைகள் நமது வயிற்று பூச்சிகளை அழிக்கும் தன்மைக் கொண்டது. எனவே தினமும் பப்பாளி விதைகளை சாப்பிட்டால், நமது வயிற்றில் இருக்கும் பூச்சிக்கள் மற்றும் புழுக்கள் அழிந்துவிடும்.

3.. குழந்தைப் பேறுகளை தள்ளிபோட நினைப்பவர்கள், மாத்திரை மருந்துகள் இல்லாமல், இயற்கையான முறையில் கருத்தரிப்பை தடுப்பதற்கு, பப்பாளியின் விதைகள் பயன்படுகிறது.

4.. பப்பாளி விதைகளை தொடர்ந்து உட்கொள்ளும் போது, நமது உடலில் கொடிய மாற்றங்களை உண்டாக்கும் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் அதை தடுக்கிறது.

5.. நமது உடம்பில் ஏற்படும் பல வகையான ஆர்த்ரைடிஸ், மூட்டு வலி, போன்ற பிரச்சனைகளின் மூலம் உண்டாகும் வீக்கத்தை குறைத்து, வலியைப் போக்குகிறது.