நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை வெந்தயக் கீரைக்கு உண்டு. இன்றளவும் வெந்தயத்தின் விதை, ஒரு ஊட்டச்சத்துப் பொருளாக பயன்பட்டு வருகிறது.

இன்றைய நவீன யுகத்தில், பழங்காலத்தை விடவும் தற்போது உணவு முறைகள் முற்றிலும் மாறிவிட்டது. இதனால், பல்வேறு நோய்கள் நம்மை மிக எளிதாக தாக்கி வருகிறது. அதில் ஒன்று தான் சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோய். பலரும் இந்நோயால் இன்று பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர். ஆனால், நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் வெந்தயக் கீரையில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா! ஆம், உண்மைதான். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை வெந்தயக் கீரைக்கு உண்டு. இன்றளவும் வெந்தயத்தின் விதை, ஒரு ஊட்டச்சத்துப் பொருளாக பயன்பட்டு வருகிறது.

வெந்தயக் கீரை

வெந்தயக் கீரையை பருப்பு, காய்கறிகள் மற்றும் பரோட்டா போன்ற வடிவில் மக்கள் உண்கின்றனர். குளிர்காலத்தில் நல்ல ஆரோக்கியத்தை வழங்குவதில் வெந்தயக் கீரைகள் பெரும்பங்கு வகிக்கிறது. வெந்தயக் கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. இக்கீரையைப் பயன்படுத்துவதால் பல நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. மேலும் பல்வேறு வகையான உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அகற்றவும் வெந்தயக் கீரை உதவுகிறது.

Almond Skin: பாதாம் தோலில் இப்படி ஒரு நன்மை இருக்கா: முடிக்கும் முகத்திற்கும் இப்படி யூஸ் பண்ணுங்க!

வெந்தயக் கீரையின் நன்மைகள்

  • வெந்தயக் கீரையில் கேலக்டோமன் உள்ளதால், இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
  • வெந்தயக் கீரையில் பொட்டாசியம் அதிகளவில் நிறைந்துள்ளது. இதனால் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. மேலும், சோடியத்தின் செயல்பாட்டையும் எதிர்த்து போராடுகிறது.
  • வெந்தயத்தில் இருக்கும் கேலக்டோமன் எனும் நார்ச்சத்து இயற்கையாக கரையக்கூடியது. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சும் விகிதத்தை குறைக்கிறது. இன்சுலின் உற்பத்தியை தூண்டும் அமினோ அமிலங்களும் இதில் அடங்கியுள்ளன.
  • வெந்தய கீரைகள் வைட்டமின் K-ன் சிறந்த மூல ஆதாரங்கள் ஆகும். எலும்பில் ஆஸ்டியோ ட்ரோபிக் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமாக, எலும்புகளை பலப்படுத்துவதில் வைட்டமின் K முக்கிய பங்காற்றுகிறது.
  • வெந்தயத்தில் ஃபீனாலிக் மற்றும் ஃபிளாவனாய்டு ஆகிய இரண்டு சேர்மங்கள் உள்ளன. இது, அதனுடைய ஆக்ஸிஜனேற்ற திறனை மேம்படுத்த உதவி புரிகிறது.