Asianet News TamilAsianet News Tamil

உஷார்: புகைப் பழக்கம் உள்ள பெண்களா நீங்கள்? உங்களுக்கு இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுவது உறுதி…

Are you women with smokers? Make sure you have so many harmful effects ..
Are you women with smokers? Make sure you have so many harmful effects ...
Author
First Published Sep 8, 2017, 1:19 PM IST


புகைப்பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு, ரத்த நோய்கள், செல் சிதைவு , புற்று நோய்கள், இன்னும் இன்னும் கொடிய பாதிப்புகள் உண்டாகிறது.

* சிகரெட்டிலுள்ள ரசாயனங்கள் விரைவில் செல் முதிர்ச்சியை அதிகப்படுத்துகின்றன. இதனால் சருமம் டல்லாகி,  முதிர்ச்சியடைந்து வயதான தோற்றம் அடைந்துவிடுவது உறுதி.

* புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும்.

* புகைப்பழக்கம் பல்லோப்பியன் குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.

* சிகரெட்டிலுள்ள நிகோடின் ரத்த செல்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளையை துண்டிப்பதால் விரைவில் செல் சிதைவு உண்டாகிறது. ஆகவே சுருக்கங்களும் , உடலில் வரிகளும் உடனடியாக குறிப்பாக பெண்களுக்கு ஊண்டாகிவிடும்.

* புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது.

* பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் சீக்கிரமே துவங்கி விடும்.

* ரத்த ஓட்டம் தடைபெறுவதால் ஆங்காங்கே செல்கள் தேங்கி விடும். அங்கே இறந்த செல்களின் தேய்மானத்தால் , கருமை படர்ந்து கரும்புள்ளி, தேமல் போன்றவை உண்டாகும்.

* பெண்ணுறுப்புப் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும்.

* பெண் புகைப்பிடித்தாலோ, சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்து அதனை சுவாசித்தாலோ மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

* உதடுகளில் இருக்கும் செல்கள் அழிந்து அந்த இடங்களில் கருப்பாக மாறிவிடும். அல்லது வெளுத்து காணப்படும். இதற்கு சிகரெட்டில் இருக்கும் மோசமாக ரசாயனங்கள் தான்  காரணமாகும்.

* ரத்த ஓட்டம் அதிகமாக இருந்தால்தான் உங்களது உடலில் உண்டாகும் காயங்களை வேகமாக குணமாற்றும். எங்கே காயம் பட்டிருகிறதோ அங்கே ரத்த செல்கள் விரைந்து சரிப்படுத்தும். ஆனால் புகைப்பிடித்தால், இந்த செயல் மிக நிதானமாக நடைபெறும். ஆகவே விரைவில் ஆறாது.

* சருமப் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் புகைப்பிடிப்பதால் உண்டாகும். சருமத்தின் துளைகளிலேயே ரசாயங்களின் தேக்கம் அதிகமாகிவிடுவதால் அவற்றின் விளைவா சருமப் புற்று நோயும், ரத்தப் புற்று நோயும் வரும் வாய்ப்புகள் அதிகம்.

Follow Us:
Download App:
  • android
  • ios