Asianet News TamilAsianet News Tamil

Sleeps in socks at night: இரவில் சாக்ஸ் அணிந்து தூங்குபவரா நீங்கள்? இந்த எச்சரிக்கை உங்களுக்குத் தான்!

தடிமனான சாக்ஸ் அணிந்து தூங்குவதால், உடலில் இரத்த ஓட்டத்தில் சிக்கல் ஏற்படலாம் என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கே காண்போம்.

Are you someone who sleeps in socks at night? This alert is for you!
Author
First Published Jan 16, 2023, 4:17 PM IST

இரவில் சிலருக்கு சாக்ஸ் அணிந்து தூங்கும் பழக்கம் உள்ளது. ஆனால், இப்படிச் செய்வதால் தீமைகள் தான் ஏற்படும். குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் குளிர்ச்சியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தடிமனான சாக்ஸ் அணிந்து தூங்குவதால், உடலில் இரத்த ஓட்டத்தில் சிக்கல் ஏற்படலாம் என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கே காண்போம்.

சாக்ஸ் அணிந்து தூங்குவதால் ஏற்படும் தீமைகள்:

சுவாசப் பாதிப்பு

இரவில் அணியும் காலுறைகளால், உடலின் வெப்பநிலை வேகமாக அதிகரித்து, அசௌகரியத்தை உணர வாய்ப்புள்ளது. மேலும், அதிக நேரம் நரம்புகளில் இருக்கும் தொடர்ச்சியான அழுத்தத்தால், சுவாசப் பாதிப்புகள் ஏற்படலாம்.

இரத்த ஓட்டத்தில் தடை

இரவில் தடிமனான அல்லது இறுக்கமான சாக்ஸ் அணிந்து தூங்கினால், உள்ளங்கால்கள் மற்றும் பாதங்களுக்கு இடையில் இரத்த ஓட்டம் நின்று, பாதங்களில் கூச்ச உணர்வு அல்லது அழுத்தத்தை உணரலாம். அத்தகைய சூழ்லில், விறைப்பு பிரச்சினை இருக்க வாய்ப்புண்டு.

சுகாதார பிரச்சினை

நாள் முழுவதும் காலுறை அணிந்து நடந்து, அதே காலுறைகளை இரவிலும் அணிந்து தூங்கினால், அதில் இருக்கும் தூசி மற்றும் அழுக்குகள் உங்கள் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும்.

அதிக வெப்பம்

இரவில் சாக்ஸ் அணிந்து தூங்குவது, உடல் சூட்டை அதிகரிக்கச் செய்து விடும். இதனால், அசௌகரியம் மற்றும் அமைதியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

Liver: கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள் இவை தான்: இனிமே உஷாரா இருங்கள்!

இதயத்தை பாதிக்கிறது

இறுக்கமான காலுறைகளை இரவில் அணிந்து தூங்கினால், அது பாதத்தில் உள்ள நரம்புகளில் அழுத்தம் கொடுத்து, இதயத்திற்கு இரத்தம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். இத்தகைய சூழலில், இதயத்தை பம்ப் செய்வதற்கு அதிக சக்தி பயன்படுத்தப்பட வேண்டும். இதனால், சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் இதயம் சேதமடையக் கூடும்.

  • இரவில் சாக்ஸ் அணிய விரும்பினால், இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்
  • இரவில் தளர்வான காட்டன் சாக்ஸ்களை மட்டும் அணிய வேண்டும்.
  • எப்போதும் துவைத்த மற்றும் சுத்தமான சாக்ஸ் அணிந்து தூங்குங்கள்.
  •  இறுக்கமான சாக்ஸை குழந்தைகளுக்கு அணிந்து தூங்க வைக்க வேண்டாம்.
  • சாக்ஸ் அணிவதற்கு முன்பாக கால்களை நன்றாக மசாஜ் செய்து விடுங்கள்.
Follow Us:
Download App:
  • android
  • ios