Banana: தினந்தோறும் வாழைப்பழத்தை சாப்பிடுபவரா நீங்கள்? இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்!

தினந்தோறும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், சில பக்க விளைவுகளும் ஏற்படும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். ஏனெனில், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சல்லவா!

Are you a person who eats bananas every day? This alert is for you!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தை விரும்பாதவர் யாரும் இல்லை. அனைவருமே  விரும்பி சாப்பிடும் பழங்களில் வாழைப்பழத்திற்கு தனித்துவமான இடமுண்டு. வாழைப்பழத்தை சாப்பிடுவதால், நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், தினந்தோறும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், சில பக்க விளைவுகளும் ஏற்படும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். ஏனெனில், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சல்லவா!

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்

அனைவரும் விரும்பும் வாழைப்பழத்தில் அதிகளவில் வைட்டமின் சத்துக்கள், கனிம சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் நமது உடலுக்கு பல்வேறு வகையில், பல நன்மைகளை அள்ளித் தருகிறது. ஆனால், வாழைப்பழத்தை தினந்தோறும் அதிகளவில் எடுத்துக் கொண்டால் ஆபத்தில் தான் முடியும். அவ்வகையில் வாழைப்பழத்தை தினந்தோறும் சாப்பிடுவதால் உண்டாகும் பக்க விளைவுகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து கொள்வோம்.  

Ghee: யாரெல்லாம் உணவில் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்: கொட்டிக் கிடக்கும் நன்மைகள்!

வாழைப்பழத்தால் உண்டாகும் பக்க விளைவுகள்

தினந்தோறும் வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால், நமது உடல் எடையானது கணிசமாக அதிகரிக்கத் தொடங்கும்.  

வாழைப்பழத்தில் சர்க்கரை சத்து அதிகமாக உள்ளது. இதிலிருக்கும் அதிகளவிலான ப்ரக்டோஸ், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்து விடும். அதிலும் குறிப்பாக வாழைப்பழத்தை காலை வேளையில் சாப்பிடக் கூடாது. 

வாழைப்பழத்தை தினந்தோறும் சாப்பிடும்போது, அது மலச்சிக்கலை ஏற்படுத்த காரணமாக அமைகிறது. ஆகையால் இப்பழத்தை அதிகமான அளவில் எடுத்துக் கொள்ள கூடாது. வாழைப்பழத்தை மிதமான அளவில் சாப்பிடுவது தான் மிகவும் நல்லது.

அதிகளவில் வாழைப்பழத்தை சாப்பிடும் நபர்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஏற்படும். ஏனென்றால் வாழைப்பழத்தில் இருக்கும் தையமின், ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்த காரணமாக அமைகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios