Asianet News TamilAsianet News Tamil

அழற்சி, ஆஸ்துமா பிரச்னைகளில் இருந்து விடுபட உதவும் வெள்ளைப் பூசனிக்காய்..!!

நம்மில் பலருக்கும் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்திலான பரங்கிக்காயை மிகவும் பிடிக்கும். ஆனால் ஏனோ வெள்ளை பூசனிக்காயை பலரும் விரும்புவது கிடையாது. அதனுடைய நன்மைகள் தெரிந்தால், அதை அப்படி ஒதுக்கமாட்டீர்கள்.
 

amazing health benefits of white pumpkin which nobody know
Author
First Published Nov 13, 2022, 12:19 AM IST

பூசணிக்காயின் பெயரைக் கேட்டாலே பெரும்பாலானோர் வாயை பிளந்துவிடுவார்கள். மஞ்சள் பூசனிக்காய் (பரங்கிக்காய்) என்றால் பலரும் விரும்புவதுண்டு. ஆனால் வெள்ளை பூசனிக்காயை யாரும் சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் இந்தியாவின் ஒவ்வொரு மாநில சமையல் முறைகளிலும் பூசனிக்காய் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் வெள்ளை பூசணிக்காயைப் பற்றியும், அதில் மறைந்திருக்கும் சத்துக்கள் பற்றியும், அந்த சத்துக்கள் நமக்கு ஏற்படுத்தும் நன்மை குறித்தும் விரிவாக கீழே சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொன்றாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்

சத்துக்கள்

வெள்ளை பூசணிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. இதனுடன் மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, ஃபோலேட், நியாசின் மற்றும் தயாமின் போன்ற தாதுக்களும் காணப்படுகின்றன.  அதன்காரணமாக மருத்துவ நலன்களை வழங்கும் காய்கறிகளுக்கான பட்டியலில் வெள்ளைப் பூசனிக்காய் முதன்மை இடம் பெறுகிறது.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்

வெள்ளை பூசணிக்காயில் பைட்டோஸ்டெரால்கள் நிறைந்துள்ளன. இது உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதன் காரணமாக இதயம் மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. வெள்ளை பூசணிக்காயில் எல்-டிரிப்டோபான் நிறைந்துள்ளது. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். ஆனால் அதை மனித உடல் உற்பத்தி செய்வது கிடையாது. அது கிடைப்பதற்கு வெள்ளை பூசணிக்காயை தான் சாப்பிட வேண்டும். வெள்ளை பூசணிக்காயை இவ்வாறு உட்கொள்வது மனச்சோர்வைக் குறைக்கவும், மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வு உணர்வுகளை அதிகரிக்கவும் உதவும்.

எந்த தண்ணீரில் குளிப்பது உடலுக்கு நல்லது? குளிர்ந்த நீரா? வெந்நீரா?

கண்களுக்கு ஆரோக்கியம்

வெள்ளை பூசணிக்காயில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் என்கிற சத்துக்கள் உள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கவும், கண்புரைகளைத் தடுக்கவும் உதவுகிறது. வெள்ளை பூசணிக்காயில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு கண்களில் எந்த பிரச்னையும் வராது.

அழற்சி எதிர்ப்பு

பூசணிக்காயின் பச்சை விதைகளை அப்படியே சாப்பிட்டால், அழற்சி பாதிப்பு ஏற்படுவது குறையும். இதன்காரணமாக மூட்டுவலி மற்றும் மூட்டு வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படாது. குடல் அழற்சிக்கான சிகிச்சையில் பூசணிக்காய் கூழில் இருந்து தயாரிக்கப்படும் மூலிகை காபி தண்ணீரைப் பயன்படுத்தலாம்.  வெள்ளை பூசணிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சுவாச மண்டலத்தை தொற்று மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கிறது. எனவே, இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios