சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோர் பார்த்ததும் முகம் சுளிக்கும் ஓரே காய் பாகற்காய். பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மையினாலேயே அதை யாரும் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது.

கொடிவகையினைச் சேர்ந்த பாகற்காய் முதலில் இந்தியாவிலேயே தோன்றியது. அதன் பின்னரே 14ம் நூற்றாண்டில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பாகற்காயில் பல வகைகள் இருந்தாலும் அதில் இரு மிதி, கொம்பு பாகற்காய் வகைகளே அதிகமாக விளைவிக்கப்படுகிறது.

இதில் மிதி வகை பாகற்காய் சிறியதாகவும், கொம்பு வகை அளவில் பெரியதாகவும் அடர்ந்த பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

சத்துக்கள்

பாகற்காயில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் ஏ கண் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தரும்.விட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் கண்களைப் பாதுகாக்க உதவுகிறது.

சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்

** பாகற்காயினை தினமும் வேகவைத்து சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தி கூடும்.

** ஒரு வாரம் தொடர்ந்து பாகற்காய் ஜீஸ் குடித்தால் ஈரல் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

** பசுமையாக உள்ள பாகற்காய் ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற தொல்லைகள் தீரும்.

** பாகற்காய் ஜீஸ் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும். ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கும் பேணுவதற்கும் சிறுநீரகக்கற்களையும் நீக்கவும் உதவுகிறது.

** தினமும் பாகற்காய் சாப்பிடுவதால் கெட்ட கொழுப்புகள் நீங்கி இதயம் பாதுகாக்கப்படுகிறது. பசியினையும் அதிகரிக்கும்.

** கணைய புற்றுநோய் செல்கள் வருவதைத் தடுக்கிறது.

** இதில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிக அளவில் உள்ளதால் செரிமானத்திற்கு உதவுகிறது.

** பாகற்காய் சாப்பிடுவதால் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு உடல் எடை குறைகிறது.

** பாகற்காயையோ அதன் இலைகளை வேக வைத்து சாப்பிடுவதால் சருமத்தில் உள்ள தொற்றுகள், பருக்கள், தழும்புகள் வேகமாக மறையும்.

** இலை சாற்றினைக் குடித்து வாந்தி எடுத்தால் கண்ணாடி விரியன் பாம்பு விஷம் கூட நீங்கும்.

** பாகற்காய் ஜீஸூடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

** தினமும் 2 வேளை குடித்து வந்தால் மூல நோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும்.