Belly Fat: தொப்பையில் கொழுப்பு சேர்வதற்கான 7 காரணங்கள்: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

அதிகளவில் வேலைப்பளு, மன அழுத்தம், தவறான நேரத்தில் தவறான உணவுகளை சாப்பிடுவது போன்ற சில காரணங்களால் உடல் நலம் சீரழிகிறது. அதோடு இந்த பழக்க வழக்கங்களால், பலருக்கும் தொப்பை கொழுப்பு அதிகரித்துள்ளது.

7 Causes of Belly Fat, Must Know!

இன்றைய கால உணவுமுறையால், பலருக்கும் கொழுப்பு அதிகளவில் சேர்ந்து உடற்பருமன் ஏற்படுகிறது. இதனால் பலரும் பல சிரமங்களை மேற்கொள்கின்றனர். உடல் எடையை குறைக்க பல விதங்களில் முயற்சி செய்தும் பலனில்லாமல் போகிறது. அதிலும், பலரது நோக்கமே தொப்பைக் கொழுப்பை குறைக்க வேண்டும் என்பது தான். குறைந்த அளவிலான உடல் இயக்கம், அதிகளவில் வேலைப்பளு, மன அழுத்தம், தவறான நேரத்தில் தவறான உணவுகளை சாப்பிடுவது போன்ற சில காரணங்களால் உடல் நலம் சீரழிகிறது. அதோடு இந்த பழக்க வழக்கங்களால், பலருக்கும் தொப்பை கொழுப்பு அதிகரித்துள்ளது.

தொப்பைக் கொழுப்பு

தொப்பை அதிகரித்ததன் காரணமாக இன்றைய யுவன், யுவதிகள் ஜிம்மை நோக்கி படையெடுத்து செல்கின்றனர். இந்த நிலையில் தொப்பை ஏற்பட 7 முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றது. அந்த காரணங்களை நாம் அறிந்து கொண்டு, அதனை முடிந்த வரையில் தவிர்த்து விட்டாலே போதும். தொப்பையை வர விடாமல் தடுத்து விடலாம்.

தவறான உணவுப் பழக்கம் 

குறைந்த புரதம், அதிக கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவிலான கொழுப்பு உணவுகள் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை பாதிப்படையச் செய்கிறது. புரோட்டீன் ஒரு நபரை நீண்ட நேரம் முழுமையாக உணர உதவி புரிகிறது. மேலும், மெலிந்த புரதத்தை உணவில் சேர்க்காமல் சாப்பிட்டால், பசியால் தூண்டப்பட்டு அதிக உணவை சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதால் உடற்பருமன் அதிகரிக்கிறது. பிஸ்கட்கள், துரித உணவுகள் மற்றும் பிற பேக்கரி உணவுகளில் டிரான்ஸ்ஃபேட் உள்ளது. இதனை அடிக்கடி சாப்பிடுவதால் தொப்பை உண்டாகும்.

 உடற்பயிற்சி இல்லாமை 

உடல் இயக்கம் குறைவாக இருப்பதும் வயிற்றை சுற்றி கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகிறது. உடலுக்குத் தேவையான அளவை விடவும், அதிகளவில் கலோரிகளை எடுத்துக் கொள்வதும் உடல் எடையை அதிகரிக்கும் மிக முக்கிய காரணமாகும்.

7 Causes of Belly Fat, Must Know!

அதிகளவு ஆல்கஹால்

அதிகளவிலான ஆல்கஹால் அருந்துவதால், ஆண்களின் வயிற்றைச் சுற்றிலும் உள்ள எடை அதிகரிக்கும்.

Pasalai Keerai: புதிய இரத்த உற்பத்திக்கு இந்த ஒரு கீரையே போதும்!

மன அழுத்தம்

ஒரு நபர் மன அழுத்தத்தில் இருக்கும் சமயத்தில், ஒரு ஸ்டீராய்டு ஹார்மோன் ஆனது வெளியிடப்படுகிறது. மேலும், உடலின் வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கிறது. பொதுமக்கள் மன அழுத்ததில் இருக்கும் நேரத்தில், ஆறுதல் அடைவதற்காக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்கின்றனர். வயிற்றைச் சுற்றி அதிகளவில் கலோரிகள் படிவதற்கு கார்டிசோல் காரணமாகிறது.

 மரபியல் 

மரபணுக்களும் உடல் பருமனுக்கு மிக முக்கிய காரணமாக அமைவதாக, பல ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

7 Causes of Belly Fat, Must Know!

தூக்கமின்மை 

குறைந்த நேரத் தூக்கம் அல்லது குறுகிய கால தூக்கத்திற்கும், அதிகமாக உணவு உட்கொள்வதற்கும் சம்மந்தம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரவு நேரத்தில் வேலை பார்ப்பவர்கள் நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதனால், வயிற்றுப் பகுதியில் அதிக அளவில் கொழுப்பு சேரும் நபர்களாக மாறுகிறார்கள்.

புகைப்பிடித்தல்

தொப்பை கொழுப்பு அதிகரிக்க புகைப்பிடித்தல் ஒரு மறைமுக காரணமாகும். புகைப்பிடிக்காதவர்களை விடவும் புகைப்பிடிப்பவர்களுக்கு தொப்பை மற்றும் உள்ளுறுப்பு கொழுப்புகள் அதிகமாக உள்ளது என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. எனவே, மேற்கண்ட பழக்க வழக்கங்களை தவிர்த்து விடுவதன் மூலம் தொப்பைக் கொழுப்பை குறைக்க முடியும் என சொல்லப்படுகிறது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios