புற்றுநோய் கட்டுப்படுத்தும் சில சக்தி வாய்ந்த மூலிகைகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. அவை என்னென்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
The Power of Traditional Medicine! 7 Ayurvedic Secrets to Prevent Cancer! புற்றுநோய் என்பது ஒரு ஆபத்தான நோய். உலகளவில் ஒவ்வொரு ஆண்டுக்கும் இந்நோயால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. புற்றுநோய்க்கான அறிகுறிகளை ஆரம்பித்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம். அதுவே தீவிரமானால் உயிரிழப்பு அபாயம் ஏற்படும். புற்றுநோய் வருவதற்கு பல காரணிகள் இருந்தாலும், அதை கட்டுப்படுத்தும் சில சக்தி வாய்ந்த மூலிகைகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. அவை என்னென்ன மூலிகைகள் என்று இங்கு பார்க்கலாம்.
1. புற்றுநோயை தடுக்க நெல்லிக்காய் உதவும்:
நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி கல்லீரல், மூளை, பெருங்குடல், நுரையீரல், மார்பகம் ஆகியவற்றின் உணர்திறன் திசுக்களில் ஃப்ரீ ரேடிக்கல் ஆக்ஸிஜனேற்ற அபாயங்களை குறைக்க உதவும். மேலும் இது கல்லீரல் நொதிகளின் செயல்பாட்டை உறுதியாக வைக்கும். முக்கியமாக நெல்லிக்காயில் புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகள் உள்ளன. எனவே, அவ்வப்போது நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால் புற்றுநோய் அபாயம் கணிச்சமாக குறையும். குறிப்பாக இது பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட சில புற்று நோய்கள் வருவதை தடுக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றன.
2. மஞ்சள் புற்று நோயை கட்டுப்படுத்தும்:
மஞ்சள் உணவில் சேர்க்கப்படும் முக்கியமான மசலா பொருள். இது புற்றுநோயை தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு மஞ்சள் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் செல்களை அழிக்க மஞ்சள் பெரிதும் உதவுகிறது. மார்பகப் புற்றுநோய், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு மஞ்சள் உதவியாக இருப்பது கண்டறியப்பட்டது.
3. துளசி புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்:
அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி ஒன்றில், துளசியானது புற்றுநோக்கி எதிரான விளைவை கொண்டிருக்கிறது என்று கண்டறிந்துள்ளன. துளசியில் இருக்கும் ஃப்ளவனாய்டுகள், ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்யும் பண்புகளை கொண்டுள்ளதால் இது தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கும். அதுமட்டுமின்றி துளசியில் இருக்கும் உர்சோலிக் அமிலம் புற்றுநோய் கட்டிகள் வளர்ச்சியைத் தடுக்கும்.
4. புதினா புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்:
புதினா உணவில் நறுமணம் மற்றும் சுவையைக் கொடுத்தாலும், இதில் இருக்கும் பெரலிக் ஆல்கஹால் புற்றுநோய் உயிர் அணுக்களின் வளர்ச்சியை தடுக்க உதவுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. எனவே அவ்வப்போது புதினா டீ குடித்து வந்தால் உடலில் அலர்ஜி ஏற்படுவதை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
5. நிலவேம்பு புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்:
நிலவேம்பு ஆயுர்வேதத்தில் பிரபலமான மூலிகைகளில் ஒன்றாகும். இது புற்றுநோய் பண்புகளை கொண்டுள்ளது மற்றும் இது புற்றுநோய் செல்களை திறம்பட அழிக்க உதவும். நிலவேம்புலிருந்து எடுக்கப்படும் சாறு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் மற்றும் பல வகையான தொற்று நோய்களின் கிருமிகளுக்கு எதிராக போராடும். மாதத்திற்கு ஒரு முறை இதை கஷாயமாக குடித்து வரலாம்.
6. அஸ்வகந்தா புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்:
அஸ்வகந்தாவில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. புற்றுநோயை தடுக்க உதவும் மூலிகைகளில் இதுவும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. மன அழுத்தம், பதட்டம், பலவீனம் போன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நல்லது என்று பல ஆய்வுகள் சொல்லுகின்றன. ஆனாலும் புற்றுநோயை தடுக்க அல்லது அதற்கு சிகிச்சை அளிக்க இதை பயன்படுத்தலாம் என்பதற்கு ஆராய்ச்சிகள் ஏதுமில்லை.
7. சீந்தில் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்:
ஆயுர்வேத மருத்துவத்தில் இது அலர்ஜி எதிர்ப்பு பண்புகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கவும் இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது. சில புற்று நோய் எதிர்ப்பு பண்புகளை இது கொண்டுள்ளது என்று ஆராய்ச்சி சொல்லுகின்றது. இதை உணவில் சேர்க்க முடியாவிட்டாலும் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி தேநீரில் சேர்த்துக் கொள்ளலாம்.

