Asianet News TamilAsianet News Tamil

டயட்டில் இருப்பவர்கள் மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்யவே கூடாதாம்..!!

உடல் குறைப்பு நடவடிக்கையில் இருப்பவர்கள், மாலை 6 மணிக்கு மேல் குறிப்பிட்ட 5 விஷயங்களை செய்யக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
 

5 Things should avoid after 6 pm while you are in the process of weight loss
Author
First Published Nov 12, 2022, 11:12 PM IST

எடை குறைப்புக்கான வழிமுறையில் கலோரி மட்டுமின்றி, கொழுப்பை எரிக்கும் செயல்முறையும் அடங்கும். அதற்கான செயல்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு சில விஷயங்கள் உதவுகின்றன. கூடுதலாக எடையை குறைப்பதற்கும், மெலிந்த தேகத்தை பெறுவதற்கும் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மட்டுமில்லாமல், மாலை நேரங்களில் சில முயற்சிகளைக் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் எடை குறைப்புக்கான முயற்சியில் இருப்பவர்கள் மாலை 6 மணிக்கு பிறகு செய்யக்கூடாத விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

காஃபைன் கூடாது

எடை குறைப்பு நடவடிக்கைக்கு காஃபைன் சேர்க்கப்பட்ட பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும். உடல் எடையை குறைப்பதற்கான முயற்சியில் இருப்பவர்கள் முடிந்தவரை 7 மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும். நீங்கள் மாலை 6 மணிக்கு பிறகு காஃபைன் கலந்த பானம் குடித்தால், அது உங்களுடைய உறக்கத்துக்கு இடையூறை ஏற்படுத்தும். இதனால் எடை குறைப்பு நடவடிக்கை தாமதிக்கப்படும்.

பழங்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

ஆரோக்கியமான உணவில் பழங்கள் இன்றியமையாதவை என்பதில் சந்தேகமில்லை, ஆனால் சூரியன் விடைபெற்றவுடன் பழங்களை உட்கொள்வது செரிமான செயல்முறையை பாதிக்கும் மற்றும் உடலில் ரத்த சர்க்கரையின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதனால் இயற்கை சர்க்கரை மற்றும் நார்ச்சத்து கொண்ட பழங்களை மாலை 6 மணிக்கு முன்பே சாப்பிட்டுவிடுங்கள்.

இரவு உணவு கொஞ்சம் தான்

நாள் முழுவதும் போதுமான அளவு சாப்பிடாமல், பின்னர் இரவு உணவின் போது அதிகமாக சாப்பிடுவது,கலோரி பற்றாக்குறையிலிருந்து உங்களை காப்பாற்றாது. மாறாக, எடை இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கும். இரவு உணவில் கலோரிகளை சேமித்து வைப்பது எடை இழப்புக்கு பெரிய அளவில் உதவாது.

சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் வேண்டாம்

மாலையில் நமது வளர்சிதை மாற்றம் குறைவதால், இரவு உணவிற்கு கார்போஹைட்ரேட்டுகள், குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் சாப்பிடுவது நல்லதல்ல. அப்படிப்பட்ட கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், அது அவ்வளவு சீக்கரம் செரிமானம் அடையாது. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளால் ஏற்படும் இரத்த சர்க்கரை அதிகரிப்பு தூக்கத்தை பாதிக்கும்.

ஒவ்வொரு மனிதனும் அடக்கி கையாள வேண்டிய 4 உணர்ச்சி நிலைகள்- விதுரர் நீதி..!!

நொறுக்குத் தீனி தவிருங்கள்

இரவுச் சாப்பாடு முடிந்தவுடன், தூங்கும் நேரத்தில் நொறுக்குத் தீனி சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். இரவு நேரத்தில் சாப்பிடப்படும் நொறுக்குத் தீனியில் கலோரிகள் கொழுப்பாக சேமித்து வைக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இது உங்களுடைய நிம்மதியான உறக்கத்தான் தான் பாதிக்கும். அதனால் உங்களுடைய எடை குறைப்பு முயற்சி பாதிக்கப்பட்டு, எப்போதும் உடல் எடை கூடிப் போனதுபோலவே இருப்பீர்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios