Asianet News TamilAsianet News Tamil

சொல்லச் சொல்ல கேட்காமல் கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி! பிரியாணி விருந்து வைத்து கொண்டாடிய கணவர்!

மனைவி தன் பேச்சைக் கேட்காமல் கள்ளக்காதலனுடன் சென்றால் விரக்தி அடைந்த அவர் நண்பர்களுக்கு பிரியாணி, ஒயின் விருந்து வைத்துக் கொண்டாடியுள்ளார்.

Wife elopes with teenager; Husband celebrates with a biryani-wine feast sgb
Author
First Published Oct 10, 2023, 9:32 AM IST

மனைவி பிரிந்து சென்றுவிட்டால், கணவன்மார்கள் சோகத்தில் மது அருந்தி புலம்புவதைப் பார்த்திருப்போம். ஆனால், கேரளாவில் ஒரு கணவர் தனது மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிப்போனதை விருந்து வைத்து அமோகமாகக் கொண்டாடியது சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள வடகரை பகுதியைச் சேர்ந்த 40 வயது இளைஞர்தான் இந்த வித்தியாசமான விருந்தை நடத்தியிருக்கிறார். விருந்துக்கு வந்தவர்களுக்கு பிரியாணி, மது வகைகள் என்று வாரி வழங்கி ஆட்டம் பாட்டம் போட்டு கொண்டாடித் தீர்த்திருக்கிறார்.

திருமணமானதும் கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்துள்ளனர். திடீரென்று மனைவிக்கு வெறொரு டீன் ஏஜ் நண்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இடையில் பூசல் தொடங்கியது. மனைவி அந்த வாலிபரை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு: அமெரிக்காவைச் சேர்ந்த கிளாடியா கோல்டினுக்கு அறிவிப்பு

விஷயம் தெரிந்ததும் கணவர் மனைவியைக் கண்டித்திருக்கிறார். ஆனால் கணவரின் பேச்சைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்த மனைவி தன் கள்ளக்காதலைத் தொடர்ந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் நடப்பது அதிகமாகியிருக்கிறது.

ஒரு கட்டத்தில் அந்தப் பெண் கணவரைக் கைவிட்டு தன் டீனேஜ் காதலனுடன் ஓடிவிடலாம் என்று முடிவெடுத்துள்ளார். சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்த அவர் கணவர் வெளியே சென்றிருந்த ஒருநாளில் தன் கள்ளக்காதலனுடன் ஓடிப்போய்விட்டார். மாலையில் வீடு திரும்பிய கணவர் தன் மனைவி வீட்டில் இல்லை என்பதை அறிந்து, அவர் ஓடிப்போய்விட்டதை உணர்ந்திருக்கிறார்.

முதலில் மனைவி இன்னொருவருடன் ஓடிப்போனதை நினைத்து சங்கடப்பட்டு  சோகத்தில் மூழ்கிக் கிடந்திருக்கிறார். ஆனால் மன உளைச்சலில் இருந்து விடுபட நினைத்து, தன்னை விரும்பாத மனைவி தன்னை விட்டுப் போனதை பண்டிகை போல கொண்டாடுவோம் முடிவு செய்திருக்கிறார்.

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து 12ஆம் தேதிக்கு மாற்றம்

ஐடியா வந்ததும் ஏராளமான நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். சுமார் 250 பேர் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மதுபானங்கள் வாங்கிக் கொடுத்து பிரியாணியும் சமைத்துப் பரிமாறியுள்ளார். போதையில் எல்லோரும் சேர்ந்து பாட்டு பாடி, குத்தாட்டம் போட்டு குஷியாக இருந்துள்ளனர்.

இந்தக் கொண்டாட்டத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர் முதலில் தன் முகத்தைக் காட்டத் தயங்குவதையும் அதன்பிறகு அவரும் வந்து நண்பர்களுடன் ஆட்டம் போடுவதையும் வீடியோவில் காணலாம். வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள், மனைவி பிரிந்து சென்றதை விருந்து வைத்துக் கொண்டாடுவதை ஆச்சரியமாக கருதி கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதனிடையே அந்த இளைஞர் தினமும் குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்து மனைவியைக் கொடுமைப்படுத்தி வந்தார் என்றும் மனைவி கணவரின் தொல்லை தாங்க முடியாமல் தவித்தபோதுதான், வேறொருவரைக் காதலித்து அவருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஒருமித்த குரலில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 5 மேற்கத்திய நாடுகள்

Follow Us:
Download App:
  • android
  • ios