Asianet News TamilAsianet News Tamil

பெண்கள் என்றும் சமரசம் செய்யக்கூடாது 5 விஷயங்கள்..!!

திருமணம் போன்ற உறவு வெற்றிபெற கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பல சமரசங்களைச் செய்ய வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் சமரசம் என்று வரும்போது, ​​எப்போதும் கவனமாக முடிவு செய்யுங்கள். ஏனென்றால் திருமணம் என்பது உங்கள் துணைக்காக உங்கள் ஆசைகள் மற்றும் கனவுகள் அனைத்தையும் சமரசம் செய்ய வேண்டியதில்லை.
 

Do not compromise on this matter for the sake of your husband
Author
First Published Mar 10, 2023, 1:14 PM IST

திருமணம் போன்ற உறவில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் கூடுதலாக, எப்போது தலைவணங்குவது, எப்போது உங்களுக்காகப் பேசுவது என்பது முக்கியம். உறவுகள் எப்போது சரி எது? தவறு எது? என்று ஆராய்வதற்காக அல்ல. அது உறவுக்குள் பேண வேண்டிய இணக்கம் பற்றியதாக உள்ளது. சில சமயங்களில் உறவைக் காப்பாற்றுவதற்காக எல்லாவற்றிலும் சமரசம் செய்துகொள்வார்கள். இதனால் அவர்கள் தங்களுடைய அடையாளத்தையே இழந்துவிடுகிறார்கள். 

எல்லாவற்றிலும் சமரசம் செய்து கொள்ளும் பழக்கம் திருமணமான பெண்களிடம் அதிகம் உள்ளது. மிகவும் உணர்ச்சிவசப்படுவதால், சில சமயங்களில் தன் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க, தனது விருப்பு வெறுப்புகளை தியாகம் செய்து விடுகின்றனர். அதனால் பெண்கள் உணர்ச்சிவசப்படுவதற்கு நீங்கள் எதில் சமரசம் செய்யக்கூடாது என்பதை தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும். அதுகுறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

சுயமரியாதை

எக்காரணம் கொண்டும் சுயமரியாதையில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. சுயமரியாதை இல்லாதவர் இறந்தவரைப் போன்றவர் என்று பகுத்தறிவு கூறுகிறது. உங்கள் சுயமரியாதையை இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு துணை உங்களை அழைத்து வந்தால், அவர்களுடனான உறவை முறித்துக் கொள்வது நல்லது. ஏனென்றால், உங்கள் சுயமரியாதையை நீங்கள் சமரசம் செய்து விட்டு தான் நீங்கள் குடும்பத்தில் அன்பையும் மரியாதையும் பெற வேண்டும் என்றால், அதை விட மோசமானது எதுவுமில்லை.

சொந்த அடையாளம் 

காதலித்து, அல்லது திருமணம் செய்து கொண்ட பிறகு, பெண்கள் பெரும்பாலும் காதலி, மனைவி என்ற பாத்திரத்தில் தங்களை மட்டுப்படுத்திக் கொள்கின்றனர். அவ்வாறு செய்வது தவறு. இன்று உங்களை நீங்கள் மறந்தது போல், நாளை உங்கள் துணை உங்களை மறந்து வேறு ஒருவருடன் சென்றால் என்ன செய்வது? அதற்கு உங்களுக்கான தனி அடையாளத்தை நீங்கள் உருவாக்குவது மிகவும் முக்கியமாகும்.

நட்புவட்டம்

குடும்பத்தினர், நண்பர்களை விட்டு விலகி இருக்காதீர்கள் உங்கள் துணையை நீங்கள் எவ்வளவு நேசித்தாலும், உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து நீங்கள் விலகக் கூடாது. நீங்கள் இப்போது உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிடுவதால், திருமணத்திற்குப் பிறகு உங்கள் வாழ்க்கையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் பங்கு குறையலாம்.ஆனால் அது காரணமாக உங்கள் துணையுடன் பேசுவதை முற்றிலும் நிறுத்துவது முட்டாள்தனம்.

பாலியல் தேவை

கணவனை மகிழ்ச்சியாக வைத்திருப்பது மனைவியின் தலையாய கடமை என்று நம் நாட்டுப் பெண்களால் ஆரம்பத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனாலேயே பெண்கள் பெரும்பாலும் தனது சொந்த மகிழ்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் தனது துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க எல்லாவற்றையும் செய்கிறார்கள். இது முற்றிலும் தவறான நடைமுறையாகும். பெண்களுக்கும் பாலியல் தேர்வு மற்றும் விருப்பு வெறுப்பு ஆகியவை உண்டு. அதை வீட்டு ஆண்களும் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தான் மனைவிக்கு பிடித்த விதத்தில் நடந்துகொள்ள வேண்டும்.

உள்ளாடை அணியாமல் விட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

ஆரோக்கியம்

நீங்கள் இந்தியா போன்ற நாட்டில் பிறந்திருந்தால், காலை முதல் இரவு வரை, உங்கள் தாய் வீட்டு வேலை செய்வதையும், உங்கள் தந்தையின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டும். ஏனென்றால், நம் நாட்டுப் பெண்கள் தங்கள் கணவனைக் கடவுள் என்று அழைப்பது மட்டுமல்லாமல், கடவுளாகக் கருதுகிறார்கள். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒவ்வொரு பெண்ணும் படுக்கையில் தூங்கும் வரை கணவனின் தேவைகளை நிறைவேற்றுவதில் மும்முரமாக இருக்கின்றனர். ஆனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான உறவு சமமாக இருக்க வேண்டும் என்பதை பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும். ட்ங்கள் துணையின் ஆரோக்கியத்தைப் போலவே தங்களுடைய உடல்நலனும்  முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

Follow Us:
Download App:
  • android
  • ios