உள்ளாடை அணியாமல் விட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
உள்ளாடை அணிவதால் உடலுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்காது. ஆனால் இதன்மூலம் உடல் சுகாதாரம் காக்கப்படும்.
பாரம்பரியமாகவே பெண்கள் ப்ரா என்று சொல்லக்கூடிய உள்ளாடையுடன் சிக்கலான உறவை பகிர்ந்து வருகின்றனர். ஒரு சிறப்பான உள்ளாடை என்பது உடலுக்கு நல்ல வடிவம் மற்றும் பொருத்தத்தை தருகிறது. எனினும், உள்ளாடை அணிவதால் அவ்வப்போது மார்பு வலி வருவதாக பெண்கள் பலரிடையே புகாரும் நிலவுகிறது. இதுதொடர்பாக பல ஆண்டுகளாக, பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உள்ளாடை அணிவது தொடர்பான உடல்ரீதியாகவும் மற்றும் உடற்கூறியல் ரீதியாகவும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதன்மூலம் உடலுக்கு எந்தவிதமான ஆரோக்கிய நன்மையும் கிடைக்காது. எனினும் நீங்கள் பயன்படுத்தும் துணி வகையை பொறுத்து மார்ப்புப் பகுதி வசதியாக இருக்கும்.
ஒரு பெண் ப்ரா அணிவது அவருடைய தனியுரிமை என்றாலும், அது அணியாமல் விட்டுவிடுவதால் சில மாற்றங்களும் ஏற்படத்தான் செய்கின்றன. அதுகுறித்து ஒவ்வொன்றாக தெரிந்துகொள்வோம்.
சருமம் மேம்படும்
நீங்கள் ப்ரா அணிவதை நிறுத்தியவுடன், அதன்மூலம் மார்பைச் சுற்றியுள்ள தோல் மற்றும் திசுக்கள் விடுவிக்கப்படுகின்றன. குறிப்பாக கோடை அல்லது ஈரப்பதமான காலநிலையில், உள்ளாடைத் துணியால் நிறைய நுண்ணுயிர் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். நீங்கள் ப்ரா அணிவதை நிறுத்தியதும், அவை மறைந்துபோகும். இதனால் உங்களுடைய மார்புத் தோலில் எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது.
உடலை ரிலாக்ஸாக்கும்
நீங்கள் உள்ளாடை அணிவதை நிறுத்தியதும் உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். இதை பெண்கள் பல சமயங்களில், தங்கள் உடலுக்கு விடுதலை கிடைத்துவிட்டதாக எண்ணுகின்றனர். இதை அறிவியல் ரீதியாக மார்க்கும் போது, உடலுக்கு ப்ரா என்பது ஒரு திணிக்கப்பட்ட துணி தான். இதன்மூலம் மார்பகங்கள் இயற்கையான முறையில் மாற்றி இயங்க கற்றுக்கொள்கின்றன. அதை அணிவதை நிறுத்தியதும், மார்பகங்களுக்கு இயற்கையான முறையில் வளர்ச்சி மற்றும் எழுச்சி கிடைக்கிறது.
பாலியல் இன்பத்தை அதிகரிக்கும் லூப்ரிகண்டை தேர்வு செய்வது எப்படி..?
மார்பகங்கள் எடுப்பாக இருக்கும்
ப்ரா அணிவதால் பெண்களுக்கு மார்பகங்கள் எடுப்பாக இருக்கும். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் சிறுவயது முதலே உள்ளாடை அணிவதை பழக்கமாக்கிக் கொண்டால், முதிய வயதில் மார்பகங்கள் தொங்காது என்கிற கருத்து பலரிடையே நிலவுகிறது. இதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ப்ரா அணிவதன் காரணமாக, மார்புப் பகுதியில் ஆங்காங்கே கூடுதல் தசைகள் தோன்றும். மேலும் மார்பகங்களின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படும். எனினும், இதுகுறித்து தொடர்ந்து ஆய்வாளர்கள் பல்வேறுகட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரத்த ஓட்டம் சீராகும்
எளிமையாகச் சொன்னால், கம்பிகள் மற்றும் கடினமான துணியால் இருந்து வந்த அழுத்தம் உங்களை விட்டு நீங்கிவிட்டது போன்ற உணர்வு இருக்கும். இதனால் உங்கள் தோல் மற்றும் திசுக்கள் வழியாக இரத்த ஓட்டம் மார்புப் பகுதியைச் சுற்றி மேம்படும். இது உங்கள் சருமத்தை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் ப்ரா இறுக்கமாக இருந்தால், உங்கள் தோல் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இதனால இருதயத்தின் தமனி பகுதிகள் மற்றும் இருதயத்திற்கான ரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றில் கூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.
உள்ளாடை சுகாதார குறிப்புகள்
ப்ரா அணியாமல் இருப்பதன் நன்மைகள் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். எனினும் உள்ளாடை தொடர்பாக சில சுகாதார குறிப்புகளை பின்பற்றுவது பல்வேறு வகையில் உதவியாக இருக்கும். முடிந்தவரை ஒரு உள்ளாடையை ஒருமுறை மட்டுமே பயன்படுத்துங்கள். அதை அடுத்த முறை பயன்படுத்துவதற்கு முன்னர் நன்கு துவைத்துவிட்டு போடுங்கள். திசுக்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்கும் நன்கு பொருத்தப்பட்ட ப்ராவை அணிவது சிறந்தது. அதேபோன்று நன்கு கிழந்த பிறகு தான் உள்ளாடையை தூக்கி எறிய வேண்டும் என்று நினைக்க வேண்டாம். அதிகப்பட்சமாக உள்ளாடைகளை ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலே பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.