Asianet News TamilAsianet News Tamil

ஆசையாக ஸ்வீட் ஊட்டிய மணமகன்.. வாங்க மறுத்த மணமகள்! மணமேடையில் வைத்தே புது மாப்பிள்ளை செய்த வெறிச்செயல்!

மணமகன் ஊட்டிவிடும்போது, மணமகள் வாங்க மறுத்ததும் கோபத்தில் மணமகளை அவர் சரமாறியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. 
 

bride and groom beat each other during wedding ceremony
Author
First Published Apr 20, 2023, 12:52 PM IST | Last Updated Apr 20, 2023, 12:52 PM IST

திருமணம் எல்லோருக்கும் இனிமையான நாளாக அமைந்துவிடுவதில்லை. பலருக்கு சொர்க்கவாசலையும், நரகவாசலையும் திருமணம் தான் திறந்து வைக்கிறது. எது எப்படியோ? திருமண நாள் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் முக்கியமான நாள் என்பதால் எப்போதும் நினைவில் இருக்குமாறு புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுக்கிறார்கள். தற்போது வித்தியாசமான கான்செப்டுகளில் திருமணத்தை நடத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மணமேடையே மணமக்களுக்கு போர்க்களமாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருமண வீட்டில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மணமகனும், மணமகளும் தங்களை அலங்கரித்து கொண்டு அன்றைய நாளை அழகாக வரவேற்பார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பங்கேற்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களும் வருகிறார்கள். ஆனால் இங்கு ஒரு திருமண மண்டபத்தில் மகிழ்ச்சிக்குப் பதிலாக, முழு சலசலப்பும், சண்டையும் நிலவியது. மண்டபத்தில் மணமக்கள் தகராறு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ட்விட்டரில் வெளியான அந்த வீடியோவில், திருமண விழாவிற்கு மத்தியில் மணமகனும், மணமகளும் ஒருவரையொருவர் அடித்துக்கொள்கின்றனர். அந்த வீடியோவில் மணமகன் மணப்பெண்ணுக்கு ஸ்வீட் கொடுக்க முயற்சி செய்வது போல தெரிகிறது. மணமகள் அதை வேண்டாம் என மறுக்கிறார். அவர் சாப்பிட மறுத்ததால் மணமகன் கோபமடைந்தார். மாப்பிள்ளையின் கையை அவர் தள்ளிவிடவே கோபத்தில், மணமகன் தன் துணையை அடித்து வெளுக்கிறார். கொஞ்ச நேரத்தில் மணமகன், மணமகளை அடித்து, தலைமுடியை பிடித்து இழுத்து செல்வதையும் வீடியோவில் காணலாம். மண்டபத்தில் இருந்த மற்றவர்கள் இருவரையும் பிரிக்க முயல்கின்றனர். 

இதையும் படிங்க: பாராட்டுக்களுக்காக பெண்கள் இப்படியும் செய்வாங்களா? ஆண்களை ஈர்க்கும் போது தான் அப்படி! ஒரு பெண்ணின் வாக்குமூலம்

இந்தப் பிரச்சனைகளுக்கு நடுவே மணமக்களை சமாதானப்படுத்த அங்கிருப்பவர்கள் முயற்சி செய்கின்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இதன் கீழ் கலவையான கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன. ஒருவர்,"நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா அல்லது விவாகரத்து செய்ய விரும்புகிறீர்களா என்பதை முடிவு செய்யுங்கள்"எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: திருமண அழைப்பிதழில் சின்ன மிஸ்டேக்.. மொத்த அர்த்தமும் மாறியது! மணமக்களை கண்டு ஊரே சிரிக்க காரணம் இதுதான்!!

சிலர் குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் வீடியோ முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும், முழு வீடியோவும் ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது என்றும் தெரிவித்தனர். திருமண வீட்டை போர்க்களமாக மாற்றிய மணமக்கள் பேசுபொருளாகியுள்ளனர். 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios