புதிய அப்பாக்கள் குழந்தையுடன் உறவை வளர்ப்பதற்கான முக்கிய டிப்ஸ்..!
பிறந்த குழந்தையுடன் பல தந்தைமார்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள சற்று தயங்குகின்றனர் என்று தான் தெரியவருகிறது. ஒருசிலர் குழந்தை இருக்கும் போது சற்று விசித்திரமாக நடந்துகொள்வர். இது அம்மாக்களுக்கு கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தும்.
குழந்தை பிறந்தவுடனே அம்மாக்களுக்கு உடனடியாக பிணைப்பு ஏற்பட்டுவிடும். ஆனால் அப்பாக்களுக்கு அப்படியில்லை. தங்களுடைய குடும்பத்தில் புதியதாக வந்துள்ள குடும்ப உறுப்பினரை அவர்கள் ஏற்றுக்கொள்ள சற்று நேரம் பிடிக்கும். தாய்மையை உணர்ந்த தந்தைமார்களுக்கு இது பொருந்தாது. ஆனால் பொதுப்புத்தி அடிப்படையில் பேசும் போது, பிறந்த குழந்தையுடன் பல தந்தைமார்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள சற்று தயங்குகின்றனர் என்று தான் தெரியவருகிறது. ஒருசிலர் குழந்தை இருக்கும் போது சற்று விசித்திரமாக நடந்துகொள்வர். இது அம்மாக்களுக்கு கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தும். அதனால் கவலை அடைய வேண்டாம். மனைவிமார்கள் தங்கள் கணவருக்கு இருக்கும் பிரச்னையை கண்டறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வைத்தால், தந்தைக்கும் தாயுள்ளம் தெரியும்.
சருமத்துடன் தொடர்பு
குழந்தையின் ஸ்பரிசத்தை உணரச் செய்வது மிகவும் முக்கியம். அதற்கு ஒரு நல்ல வசதியான நாற்காலியில் சட்டை அணியாமல் தந்தையை உட்காரச் செய்து, அவருடைய கையில் குழந்தையை கொடுத்துவிட வேண்டும். அவர் தனது நெஞ்சில் அரவணத்துக் கொள்ள வேண்டும். குழந்தை தந்தையின் சருமத்தை உணரும். இதன்மூலம் தனது குழந்தை மீது நல்ல பிணைப்பு தந்தைக்குள் ஏற்படும்.
குழந்தைக்காக பாடலாம்
கரு உருவான 32 வாரங்களில், அதனால் தந்தையின் குரலை உணர முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் உங்களுடைய கணவர் விசித்திரமான குணம் படைத்தவராக தெரிந்தால், குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பேச வையுங்கள். குழந்தைக்கு அவரை பாட வையுங்கள். இதனால் ஒரு பிணைப்பு ஏற்பட்டு, குழந்தை பிறந்த பிறகும் அது தொடரும் வாய்ப்பு இருக்கும்.
குழந்தைதை ஏந்த வைப்பது
பெண்கள் தனது சொந்த நலனையும் தாண்டி வீட்டுக்காக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் குடும்பத் தேவைக்காக பெண்கள் வெளியே செல்லும் போது, கணவர் தான் குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சூப்பர் மார்க்கெட்டில் பெண்கள் பிஸியாக ஷாப்பிங் செய்யும் போது, உடனிருந்து பேபி வியரிங் பேகில் குழந்தையை போட்டுவிட்டு ஆண்கள் அவர்களுக்கு உறுதுணை செய்ய வேண்டும்.
உங்களுக்கு மழைக்காலங்களில் பல் கூச்சம் உண்டாகுகிறதா..?? இந்த பிரச்னையாக இருக்கலாம்..!!
ஸ்ட்ரோலை கணவனிடம் ஒப்படையுங்கள்
வெளியே செல்கையில் குழந்தையை வைத்து தள்ளக்கூடிய ஸ்ட்ரோலை கணவனிடம் ஒப்படைத்திடுங்கள். இதன்மூலம் குழந்தையை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு தனக்கு உள்ளது என்பது கணவருக்கு தெரியவரும். இதை உணர்ந்துகொண்டு, அவர் குழந்தையுடன் நெருங்குவதற்கு முயற்சி செய்வார். இந்த நெருக்கம் பின்நாளில் உறவாக மாறி பிணைப்புடன் இருக்கும்.
சக்கரை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து- நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை..!!
புதிய விதிகளை உருவாக்கிடுங்கள்
குழந்தையை பெறுவது பெண்கள் தான் என்பதால், எப்போதும் குழந்தை அவர்களிடம் தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. குழந்தை பால் குடிக்கும் நேரம் மற்றும் தூங்கும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் கணவனிடம் ஒப்படைத்திடுங்கள். புதிய விதிகளை உருவாக்கி குழந்தையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். அப்போது தான் குழந்தை தந்தையின் நடவடிக்கையையும் சேர்ந்து புரிந்துகொண்டு பகுத்தறிய துவங்கும்.