கொரோனா தொற்று மீண்டும் பரவுவதால் சில உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
Which Foods Boost Immunity Faster For Covid 19 : கோவிட்- 19 இன் தாக்கம் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துவிட்டது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் போன்ற இடங்களில் கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் கோவிட் பற்றிய பயம் மக்கள் மத்தியில் மீண்டும் எழ ஆரம்பித்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கோவிட் 19 தாக்கத்திலிருந்து தப்பிக்க சாப்பிட வேண்டிய சூப்பர்ஃபுட்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
1. பூண்டு :
பூண்டு ஒரு இயற்கையான ஆன்டிபயாட்டிக் மருந்தாகும். வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இதில் உள்ளன. கோவிட் போன்ற வைரஸ்களை எதிர்த்துப் போராட இது பெரிதும் உதவும். எனவே உங்களது உணவில் பூண்டை ஏதாவது ஒரு வடிவில் தினமும் சேர்த்து கொண்டால் மட்டும் போதும்.
2. மஞ்சள்:
மஞ்சளில் இருக்கும் குர்குமின் வீக்கம் மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராடும். எனவே தினமும் இரவு தூங்கும் முன் பாலில் மஞ்சள் கலந்து குடியுங்கள். ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
3. பச்சை இலை காய்கறிகள்:
ப்ரோக்கோலி, கேப்சிகம், கீரை போன்ற பச்சை இலை காய்கறிகளில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
4. பருவ கால பழங்கள்
கோடையில் கிடைக்கும் மாம்பழம், தர்பூசணி, லிச்சி போன்ற பருவக்கால பழங்களை சாப்பிடுங்கள். அவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், அவை வைரஸ்களை எதிர்த்து போராடும் செல்களை சுறுசுறுப்பாக வைக்க உதவும்.
5. நட்ஸ்கள் மற்றும் விதைகள்:
பாதாம், வால்நட்ஸ், சியா விதைகள், பூசணி விதைகள் போன்ற நட்ஸ்கள் மற்றும் விதைகளில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
6. துத்தநாகம் உணவுகள்:
வேர்க்கடலை போன்ற துத்தநாகம் நிறைந்த உணவுகள் வைரஸ்களின் வளர்ச்சியை தடுக்கும் மற்றும் வெள்ளை ரத்த அணுக்களை வலுப்படுத்த பெரிதும் உதவும்.
7. தயிர்:
கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால், இது தொற்றுகளை எதிர்த்து போராட உதவும்.
குறிப்பு:
கோவிட் 19 தொற்றிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவை தினமும் சாப்பிடுங்கள். அதுபோல தினமும் காலை 10 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்கவும். அதிலிருந்து வைட்டமின் டி உங்களுக்கு கிடைக்கும் மேலும் 7-8 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம் இதனுடன் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். அதுவும் சூடான நீரை மட்டும் குடிக்கவும். யோகா, தியானம் போன்ற பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம்.
