Asianet News TamilAsianet News Tamil

தினமும் மேகி சாப்பிடும் நபரா? பெரிய விபரீதம் நடக்கும் ஜாக்கிரதை!!

மிக விரைவாக தயாரிக்கப்பட்டு, மிக விரைவாக நம் வயிற்றை நிரப்பும் மேகி, அடிக்கடி சாப்பிட்டால் விரைவில் நம் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்.

what happens if you eat maggi everyday in tamil mks
Author
First Published Nov 8, 2023, 3:27 PM IST | Last Updated Nov 8, 2023, 3:37 PM IST

மேகி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. இதனை காலை, மாலை என இரு வேளையும் சாப்பிடுவது பலருக்கு பிடிக்கும். இருப்பினும், சிலர் எடை கூடும் என்ற பயத்தில் மேகி சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். சிலர் டயட்டில் இருந்தாலும் மேகி சாப்பிட மாட்டார்கள். ஆனால், உணவுக் கட்டுப்பாட்டின் போது நீங்கள் உண்மையிலேயே மேகி சாப்பிட வேண்டுமா ? அப்படி சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லதா? இன்று அதை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். 

what happens if you eat maggi everyday in tamil mks

இதையும் படிங்க:  நூடுல்ஸ் சாப்பிட்ட பெண் துடிதுடித்து சாவு.. எலிக்கு வைத்திருந்த தக்காளியால் ஏற்பட்ட விபரீதம் !

இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் கூறுகையில், சிறுவயது முதல் கல்லூரி வரை நண்பர்களுடன் சேர்ந்து பலமுறை சாப்பிட்டு வந்த உணவுதான் மேகி. மேகியை மிகவும் விரும்பி சாப்பிடுபவர்கள் கூட மேகியை வேண்டாம் என்று சொல்ல முடியாது. ஆனால், டயட் செய்யும் போது மேகி சாப்பிட வேண்டுமா? என்பது முக்கியமான கேள்வி. இதற்கு மேகியில் உள்ள சத்துக்களை தெரிந்து கொள்வோம்.

இதையும் படிங்க: maggie noodles price: மேகி நூடுல்ஸ், டீ, காபி இனி காஸ்ட்லி: 16% விலை உயர்ந்தது: சாமானியர் பாக்கெட்டுக்கு சூடு

what happens if you eat maggi everyday in tamil mks

மேகியில் இருக்கும் சத்துக்கள்:
ஒரு தட்டில் மேகியில் 205 கலோரிகள், 9.9 கிராம் புரதம் மற்றும் 131 கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. மற்ற தின்பண்டங்களுடன் ஒப்பிடும்போது மேகியில் கலோரிகள் குறைவு. எனவே நீங்கள் டயட்டில் இருக்கும்போது கூட மகிழ்ச்சியாக மேகி சாப்பிடலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேகி என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு பிரபலமான உணவாகும். மேகியும் எளிதாகக் கிடைக்கிறது மற்றும் எங்கும், எந்த நேரத்திலும் சாப்பிடலாம். திரைப்படம் பார்க்கும் போது மேகியை சௌகரியமாக ரசிக்க முடியும், ஆனால் இது நல்ல ஆரோக்கியத்திற்கு மாற்றாக இல்லை என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

what happens if you eat maggi everyday in tamil mks

மேகியில் வைட்டமின்கள், நார்ச்சத்து அல்லது தாதுக்கள் எதுவும் இல்லை. மேகி நீண்ட காலம் நீடிக்க, அதன் சுவையை அதிகரிக்க மேகியில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த மேகியில் கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் உப்பு அதிகம் உள்ளது. மேகியில் புரதம் அல்லது நார்ச்சத்து இல்லாததால், அதை சாப்பிடுவதால் உடல் எடை குறைய வாய்ப்பில்லை. அதனால் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மேகி சாப்பிடுவது நல்லது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios