அடுப்பை ஆன் பண்ணாமல் 5 நிமிடத்தில் செய்ய கூடிய சுவையான பாயாசம்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க!

நீங்கள் எப்போதாவது இளநீருடன் பாயாசத்தை முயற்சித்திருக்கிறீர்களா.. இளநீர் பாயாசம் ரெசிபி இதோ...

tender coconut payasam or elaneer payasam recipe in tamil mks

பாயாசம் என்றாலே நம் அனைவரது நாவில் எச்சில் ஊறும். இதனை விரும்பாதோர் யாருமில்லை. இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் இனிப்பு வகை ஒன்று. அதிலும் குறிப்பாக, தென்னிந்தியாவில் திருமணங்களில் மற்றும் பண்டிகை நாட்களில் பாயாசம் கட்டாயம் இருக்கும். இன்னும் சொல்லப் போனால், பாயாசம் இல்லாத  திருமண வீடுகளை பார்ப்பது அரிது. பொதுவாகவே, பாயாசங்களில் பல வகைகள் உண்டு. அவை, பால் பாயாசம், சேமியா பாயாசம், பருப்பு பாயாசம் என இப்படி சொல்லி கொண்டே போகலாம். அவ்வளவு வெரைட்டிகள் இருக்கிறது.

ஆனால், நீங்கள் எப்போதாவது இளநீருடன் பாயாசத்தை முயற்சித்திருக்கிறீர்களா!..இளநீர் பாயசம் என்பது ஒரு புதுவிதமான சுவையை கொடுப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு அரோக்கியத்தையும் கொடுக்கிறது. இளநீரில் தான் 100% கலப்படம் ஏதும் இல்லை என்பதால், நாம் பயப்படாம இதனை செய்து சாப்பிடலாம். எனவே, இத்தொகுப்பில் நாம், மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் 'இளநீர் பாயாசம்' எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த பாயாசம் செய்ய அடுப்பு தேவையில்லை. கேட்க சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா... சரி வாங்க...

இதையும் படிங்க:  ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க "நுங்கு பாயசம்" சூப்பராக இருக்கும்

தேவையான பொருட்கள்:
இளநீர் - 1 கப்
தேங்காய் கூழ் -  4 டீஸ்பூன்
பால் - 2-3 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/4 கப்
முந்திரி - 2

இதையும் படிங்க: உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி வைத்து அசத்தலான பாயசம் செய்யலாம் வாங்க !

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் தேங்காய் தண்ணீர் சேர்க்கவும்.
  • பிறகு ஒரு தேங்காயை ஒரு மென்மையான பேஸ்டாக அரைக்கவும்.
  • இதை இளநீர் உடன் சேர்த்து, நன்றாக கலக்கவும்.
  • இதனுடன் பால் மற்றும் தேங்காய் பால் சேர்க்கவும்.
  • நீங்கள் விரும்பினால் வறுத்த முந்திரி சேர்த்துக் கொள்ளலாம். பின் குளிர வைக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான இளநீர் பாயாசம் ரெடி!!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios