Asianet News TamilAsianet News Tamil

கேரளா ஸ்டைலில் இப்படி ஒருமுறை அவியல் செஞ்சு அசத்துங்க.. செம்ம டேஸ்ட்!

Kerala Avial Recipe : இந்த கட்டுரையில் கேரளா ஸ்டைலில் அவியல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

tasty kerala style avial recipe in tamil mks
Author
First Published Aug 28, 2024, 2:38 PM IST | Last Updated Aug 28, 2024, 2:38 PM IST

அவியல் என்றாலே பல காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையான உணவாகும். நீங்கள் அவியல் பிரியர் என்றால், உங்களுக்கான பதிவு தான் இது. ஆம் உங்கள் வீட்டில் நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியான அவியல் செய்து சாப்பிடுகிறீர்களா? அப்படியானால், ஒரு முறை கேரளா ஸ்டைலில் அவியல் செய்து சாப்பிடுங்கள். அதன் சுவை அட்டகாசமாக இருக்கும் மற்றும் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய வகையில் அதன் சுவை இருக்கும். சரி வாங்க ..இப்போது இந்த கட்டுரையில் கேரளா ஸ்டைலில் அவியல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  கேரளா ஸ்டைலில் சின்ன வெங்காயம் புளிக்குழம்பு.. ரெசிபி இதோ!

கேரளா ஸ்டைலில் அவியல் செய்ய தேவையான பொருட்கள் :

கேரட் - 1/4 கப் (நீளமாக நறுக்கியது)
பீன்ஸ் - 10 (நீளமாக நறுக்கியது)
முருங்கைக்காய் - 1 (நறுக்கியது)
அவரைக்காய் - 10 (நறுக்கியது)
கத்தரிக்காய் - 3 (நறுக்கியது)
சேனைக்கிழங்கு - 1/4 கப்
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
தேங்காய் துருவல் - 1/4 கப்
தயிர் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - 1 கிளாஸ்
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: டேஸ்ட்டான கேரளா ஸ்டைல் கோழிக்கறி குழம்பு.. ரெசிபி இதோ!

செய்முறை :

  • கேரளா ஸ்டைலில் அவியல் செய்ய முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும். பின் குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு இறக்கவும்.
  • இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சீரகம், பச்சை மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரில் விசில் போனதும், குக்கரை அடுப்பில் வைத்து அதில் அரைத்து வைத்த மசாலாவை அதில் சேர்த்து கிளறி விடுங்கள். சிறிது நேரம் கழித்து தயிர் சேர்க்கவும் அடுத்து அவற்றை நன்றாக கொதிக்க விடுங்கள்.
  • மறுபுறம், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். இப்போது தாளித்த இதனை குக்கரில் சேர்த்து, ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் டேஸ்டான கேரளா ஸ்டைல் அவியல் தயார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios