Ulli Theeyal Recipe : இந்த கட்டுரையில் கேரளா உளி தீயல் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கேரளாவில் உள்ள எல்லாவிதமான உணவுகளும் சற்று வித்தியாசமான சுவையில் இப்பதற்கு முக்கிய காரணம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் தான். அந்த வகையில் கேரளாவில் மிகவும் பிரபலமான உளி தீயல் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காய புளிக்குழம்பு செய்வது எப்படி என்று இன்றைய கட்டுரையில் நாம் பார்க்கலாம். இந்த குழம்பு சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். ஒரு முறை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் கேரளா உளி தீயல் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க:  காரசாரமான சுவையில் வெண்டைக்காய் புளிக்குழம்பு... இப்படி ஒருமுறை செஞ்சு சாப்பிடுங்க!

தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் - 1/2 கப்
புளி சாறு - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சீரக பொடி - 1/2 ஸ்பூன்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
மல்லி - 1/2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 3
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
வர மிளகாய் - 2
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: ருசியான பூண்டு குழம்பு இப்பவே செஞ்சு சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!

செய்முறை : 

இந்த குழம்பு செய்ய முதலில் அடுப்பில் ஒரு கடலை வைத்து அதில் துருவிய தேங்காய் மல்லி, மிளகு, வரமிளகாய் வெந்தயம் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வறுக்கவும். பிறகு அதை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும். அவை நன்கு ஆறியதும் அதே ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரக பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து சுமார் 2 நிமிடம் வதக்கி வதக்கவும். பிறகு இதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் புளிசாறு சேர்த்து குழம்பு சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் கேரளா ஸ்டைலில் சின்ன வெங்காய புளிக்குழம்பு ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D