Culiflower 65 Recipe : எல்லோருக்கும் பிடித்தமான காலிஃப்ளவர் 65 அசைவ உணவின் சுவையில் எளிமையாக எவ்வாறு தயார் செய்யலாம் என்பது குறித்து இங்கு காணலாம். 

குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் காலிப்ளவரை விரும்பாத குழந்தைகளே இருக்கமாட்டார்கள். பார்ப்பதற்கு சிக்கன் 65 மாதிரி இருந்தாலும், உண்ணும் போது சைவ உணவின் சுவை தெரிந்துவிடும். அப்படி தெரியாமல் அசைவம் மாதிரியே காலிப்ளவரை எளிமையான முறையில் சமைக்க முடியும். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விடுமுறை நாட்களில் காலிஃப்ளவரை வீட்டில் உள்ளவர்களுக்கு, பொறித்துக் கொடுத்தால் அவர்கள் விரும்பி உண்பதை கண்ணார காணலாம். இதை வெறும் ஸ்நாக்ஸ் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. தயிர்சாதம், தக்காளி சாதம் மாதிரியான வெரைட்டி ரைஸுக்கு காலிப்ளவர் பக்கோடா அருமையான சைடிஷ். புலாவ் சமைக்கும்போது கூடவே கொஞ்சம் காலிப்ளவர் 65 செய்தால் அன்றைய லஞ்ச் அசத்தலாக இருக்கும். அப்படிப்பட்ட காலிப்ளவரை எப்படி செய்யலாம் என்று இங்கு காணலாம். 

இதையும் படிங்க: Soya 65 : 10 நிமிடத்தில் சிக்கன் 65 சுவையில் சோயா 65.. ஒருமுறை செய்ங்க.. அடிக்கடி செய்வீங்க!

தேவையான பொருட்கள்:

காலிப்ளவர் - 1/2 கிலோ
மஞ்சள் - 1/2 ஸ்பூன்
மைதா - 1 1/2 ஸ்பூன்
சோள மாவு - 1 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
கடலை மாவு - 1 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா- 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் 'இறால் 65' ... இனி வீட்டிலும் செய்யலாம்..!!

செய்முறை: 

  • காலிஃப்ளவர் 65 செய்யும் முதலில், எடுத்து வைத்த காலிஃப்ளவரை நன்கு சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் காலிப்ளவர், சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு கொதி வரவிட்டு, பிறகு தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவரை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, மைதா மாவு, சோள மாவு, கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நான்கு கலக்கவும். இதனுடன் வேக வைத்து எடுத்துள்ள காலிஃப்ளவரையும் சின்ன சின்ன துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். காலிஃப்ளவரில் மசாலா இறங்க வேண்டும். சுமார் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  • இதனை அடுத்து அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தயாரித்து வைத்த காலிஃப்ளவரை போட்டு பொன்னிறமாக பொறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் காலிஃப்ளவர் 65 ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D