Asianet News TamilAsianet News Tamil

ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் 'இறால் 65' ... இனி வீட்டிலும் செய்யலாம்..!!

ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் வீட்டிலேயே மொறுமொறுப்பான இறால் 65 எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம்.

easy restaurant style prawn 65 recipe at home in tamil mks
Author
First Published Aug 30, 2023, 1:51 PM IST

ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் மொறுமொறுப்பான இறால் 65 மிகவும் சுவையாகவும், தயாரிப்பதற்கும் மிகவும் எளிதாகவும் இருக்கும். இதனை செய்ய அதிக நேரம் தேவையில்லை. மேலும் இதனை சமைப்பதற்கு குறைவான பொருட்களை போதும். குறிப்பாக இறால்களை சுத்தம் செய்யும் போது அதிலிருந்து உள் கோட்டை மற்றும்  செல்லை அகற்றவும் ஆனால் வால் பகுதியை வைக்கவும். வறுக்கும்போது மிருதுவாகவும், பிடிக்க எளிதாகவும் இருக்கும். மேலும் இறாலை மஞ்சள் தூள் கொண்டு கழுவி வந்தால் மீன் வாசனையை போக்கலாம்.

இந்த இறால் 65 ஐ சூப்புடன் ஸ்டார்ட்டராகவோ அல்லது சாதம் மற்றும் கறியுடன் அல்லது சாலட்டுடன் அல்லது சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம். இந்த மொறுமொறுப்பான இறால் 65 ஐ சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இறால் 65 எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம் வாங்க..

இதையும் படிங்க: இந்த ஸ்டைலில் சுவையான "நண்டு மசாலா" செய்யுங்க..தட்டு காலியாகும்...

இறால் 65 செய்ய தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்யப்பட்ட இறால் - 250 கிராம்  
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
மிளகு தூள் - 1/4 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
எலுமிச்சை சாறு  - 1 டீஸ்பூன்

இதையும் படிங்க:  வீட்டில் காய்கறி இல்லையா? அப்போ காரமான "சோயா கறி" ரெசிபி செய்யுங்கள்..!!

இறால் 65 செய்முறை:

  • இறாலை சுத்தம் செய்ய சிறிது மஞ்சள் தூள் கொண்டு கழுவவும்.
  • ஒரு பாத்திரத்தில், அனைத்து மசாலா தூள்கள் மற்றும் மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின் அவற்றில் இறால் துண்டுகளை சேர்க்க வேண்டும்.
  • ஒரு 15 நிமிடம் அதனை அப்படியே ஊறவைக்க வேண்டும்.
  • இப்போது ஒரு கடாயில், மிதமான சூடான எண்ணெயில் இறாலை வறுக்கவும். புரட்டி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
  • கறிவேப்பிலையை வறுத்து, பொரித்த இறாலின் மேல் அலங்கரிக்கவும். பின் எலுமிச்சை சாற்றை இறால் மீது பரவலாக ஊற்ற வேண்டும்.
  • இப்போது ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான இறால் 65 ரெடி..
Follow Us:
Download App:
  • android
  • ios