தமிழ் புத்தாண்டு 2023: புத்தாண்டான இன்று இந்த பாயசத்தை நெய்வேத்தியமாக படைத்து தெய்வத்தின் அருளை பெறுங்கள்!

Tamil New Year 2023: வாருங்கள் !கமகமக்கும் நெய் வாசனையில் தித்திப்பான பாயசத்தை செய்து தெய்வத்திற்கு படைத்து புத்தாண்டினை சிறப்பாக கொண்டாடலாம்

Tamil New Year 2023: Traditional Moong Dal Sabudana Payasam in Tamil

தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரையை தமிழ் வருடப் பிறப்பாக உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் இன்று  கொண்டாட உள்ளோம். இந்த நன்னாளில் நாம் வீட்டில் சில வகை பிரசாதங்களை செய்து தெய்வத்திற்கு படைத்து பூஜை செய்து வழிபடுவோம். பாயசம் இல்லாமல் எந்த ஒரு நெய்வேத்தியமும் இருக்காது. வழக்கமாக பாயசம் என்றவுடன் சேமியா பாயசம்,பால் பாயசம்,அவல் பாயசம் என்று சில குறிப்பிட்ட பாயாசத்தை மட்டுமே செய்து வழிபடுவோம். இன்று சற்று வித்தியாசமாக ஜவ்வரிசியும் பாசிபருப்பும் சேர்த்து கமகம நெய் வாசனையில் பாயசம் செய்து தெய்வத்திற்கு படைத்து வழிபடுவோம்.

Tamil New Year 2023: வாருங்கள் !கமகமக்கும் நெய் வாசனையில் தித்திப்பான பாயசத்தை செய்து தெய்வத்திற்கு படைத்து புத்தாண்டினை சிறப்பாக கொண்டாடலாம்

தேவையான பொருட்கள்:

பாசி பருப்பு – 1/2 கப்
ஜவ்வரிசி – 1/4 கப்
பால் –1 கப்
பொடித்த வெல்லம் –1 கப்
துருவிய தேங்காய்-1/4 கப்
நெய் - தேவையான அளவு
முந்திரிப் பருப்பு – 10
திராட்சை – 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்
தண்ணீர் – 3 கப்

செய்முறை :

முதலில் பாசிப்பருப்பை ஒரு கடாயில் போட்டு லேசாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தண்ணீர் ஊற்றி அலசி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஜவ்வரிசியை ஒரு முறை அலசி அதனையும் பாசிப்பருப்புடன் சேர்த்து ஊற வைத்து விட வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து அதில் பால் ஊற்றி காய்ச்சிக் கொண்டு இறக்கி வைத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் 3 கப் அளவில் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பு மற்றும் ஜவ்வரிசி சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் பொடித்த வெல்லம் மற்றும் தண்ணீர் ஊற்றி பாகு ரெடி செய்து விட்டு ,அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். பாகினை ஆற வைத்து விட்டு பின் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் நெய் ஊற்றி , நெய் காய்ந்த பிறகு, முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். இப்போது குக்கரில் இருக்கும் கலவையில் ஆற வைத்துள்ள பால் மற்றும் வெல்லப் பாகினை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். சுமார் 7 நிமிடங்கள் வரை கொதித்த பின்னர் இறுதியாக ஏலக்காய் தூள் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி,திராட்சை சேர்த்து பரிமாறினால் சுட சுட ,கமகம நெய் வாசனையில் தித்திப்பான பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயசம் ரெடி!
இந்த பாயசத்தை செய்து தெய்வத்திற்கு நெய்வேத்தியமாக படைத்து புத்தாண்டினை குடும்பத்துடன் கொண்டாடி மகிழுங்கள்.

சித்திரை மாத ராசி பலன் 2023: சூரிய குபேர யோகத்தால் செல்வ செழிப்புடன் இருக்க போகும் 4 ராசிகள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios