காரமான சுவையில் கார்லிக் மஸ்ரூம்.. ரெசிபி இதோ..!!

இத்தொகுப்பில், சுலபமான முறையில் கார்லிக் மஸ்ரூம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

spicy garlic mushroom recipe step by step  in tamil mks

நீங்கள் இன்று மதியம் சாதத்திற்கு வித்யாசமான முறையில் சைடிஸ் சாப்பிட விரும்புகிறார்களா? அப்போ 'கார்லிக் மஸ்ரூம்' ட்ரை பண்ணுங்க. இதை நீங்கள் சப்பாத்தியுடன் வைத்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவ உணவை ஈடுகட்டும் வகையில் பட்டர் கார்லிக் மஸ்ரூம் இருக்கும். எனவே, இப்போது கார்லிக் மஸ்ரூமை எப்படி செய்வதென்று இங்கு பார்க்கலாம்.

தேவையான அளவு:
மஸ்ரூம் - 100 கிராம்
பூண்டு - 5
மிளகாய்வத்தல் - 3
பெரிய வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
வெண்ணை - 2 தேக்கரண்டி
கொத்தமல்லிஇலை - தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

இதையும் படிங்க:  சுவையான 'ஆம்லெட் கறி' ஒருமுறை இப்படி செஞ்சி பாருங்க அட்டகாசமாக இருக்கும்!

செய்முறை:

  • இதற்கு முதலில், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பின் மஸ்ரூம் பாதியாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
  • இதனை அடுத்து ஒரு பாத்திரத்தில், வெண்ணெய் ஊற்ற வேண்டும். அது நன்கு சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
  • மறுபுறம் மசாலாவுக்காக பூண்டு மற்றும் மிளகாய் வத்தல் ஒரு மிக்ஸியில் போட்டு சிறித்து தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்த கொள்ளுங்கள்.
  • பிறகு அரைத்த கலவையை வெங்காயம் குடைமிளகாய் நன்கு வதங்கியவுடன் அதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இதையும் படிங்க: கமகமக்கும் வாசனையில் 'பக்கோடா குழம்பு' ..கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.. ரெசிபி இதோ!!

  • கலவையின் பச்சை வாசனை போனவுடன் அதில் மஷ்ரூம் சேர்த்து கிளறி மூடி வைக்க வேண்டும்.
  • மஷ்ரூம் நன்கு வெந்தவுடன் கடைசியாக அதில் உப்பு சேர்த்து மல்லி இலை தூவி நன்கு வதங்கி இறக்கவும். அவ்வளவு தான் இப்போது காரமான ருசியில் கார்லிக் மஸ்ரூம் ரெடி...! 
  • இந்த கார்லிக் மஸ்ரூமை நீங்கள் சுடான பாசுமதி சாதத்துடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். மேலும் நீங்கள் விரும்பினால் சப்பாத்தியுடன் வைத்தும் சாப்பிடலாம். கண்டிப்பாக செய்து பாருங்கள். உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios