Aval Rava Idli Recipe : இந்த கட்டுரையில் ரவை அவல் இட்லி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இன்று காலை இட்லி தோசை சுடுவதற்கு மாவு எதுவும் இல்லையா? வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன செய்து கொடுப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது. ஆம், உங்கள் வீட்டில் ரவையும், அவலும் இருந்தால் இந்த இரண்டையும் வைத்து அருமையான சுவையில் இட்லி செய்து கொடுங்கள். இந்த இட்லி சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள். முக்கியமாக குழந்தைகள் இந்த இட்லியை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் ரவை அவல் இட்லி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: காலை டிபனுக்கு சத்தான வெஜிடபிள் இட்லி.. இப்படி செஞ்சு அசத்துங்க!

ரவை அவல் இட்லி செய்ய தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்
அவல் - 1 கப்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
முந்திரி - 5
பச்சை மிளகாய் - 1 
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கேரட் - 1
புளித்த தயிர் - 1 கப்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: காலையில் ஒருமுறை இப்படி முட்டையை வைத்து டேஸ்டான டிபன் செய்ங்க.. ரொம்பவே சத்தானது..

செய்முறை:

ரவை அவல் இட்லி செய்ய முதலில் எடுத்து வைத்த அவலை நன்கு தண்ணீரில் கழுவுங்கள். பிறகு அதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து, சுமார் 15 நிமிடம் ஊற வையுங்கள். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு முந்திரி ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். அவை பொன்னிறமாக வந்ததும், அதில் பெருக்காய்த்தூள் பொடியாக நறுக்கி வைத்த பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் துருவிய கேரட்டையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் ரவையையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

இதனை அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த அவலை சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அதில் வதக்கி வைத்த பொருட்களை சேர்க்கவும் இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கவும். இதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள். சும்மா பத்து நிமிடம் அப்படியே ஊற வைக்கவும்.மாவு நன்றாக ஊறியதும், இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி வேக வைத்து எடுத்தால் அட்டகாசமான சுவைகள் ரவா அவல் இட்லி ரெடி. இந்த இட்லியுடன் நீங்கள் தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி என எதை வைத்து வேண்டுமானாலும் சாப்பிட்டாலும், அருமையாக இருக்கும். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D