Asianet News TamilAsianet News Tamil

Sweet: சுவையான ஸ்வீட் செய்ய அரிசி மாவு போதும்: அதுவும் ஈஸியாக!

இனிப்பு வகை என்றால் அனைவருமே ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அவ்வகையில், இப்போது வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய இனிப்பு வகை ரெசிபி பற்றி காணலாம்

Rice flour is enough to make delicious sweets: easy too!
Author
First Published Dec 2, 2022, 10:21 PM IST

தின்பண்டங்கள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. அதிலும், இனிப்பு வகைப் பொருள் என்றால் பலரும் விரும்பி உண்பார்கள். இன்னும் சொல்லப்போனால் பால் பொருட்களால் ஆன இனிப்பு வகை என்றால் அனைவருமே ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அவ்வகையில், இப்போது வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய இனிப்பு வகை ரெசிபி பற்றி காணலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 5 டீஸ்பூன்
சர்க்கரை - அரை கப்  
பால் - 2 கப்
முட்டை - 2
தண்ணீர் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் அல்லது வெண்ணிலா எஸன்ஸ்- ஒரு டீஸ்பூன்

Young forever: எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா? இந்த பருப்பை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!

செய்முறை

ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 4 டீஸ்பூன் சர்க்கரையுடன் 2 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி கொள்ள வேண்டும்.

மிதமான சூட்டில் நன்கு கிளறி விட வேண்டும். ஏறக்குறைய 5 நிமிடங்களில் அதன் நிறம் மாறி, பாகு தயாராகி விடும். இதனை ஸ்வீட் செய்வதற்காக வைத்துள்ள பாத்திரத்தில் கொட்ட வேண்டும். பின்னர் அரை லிட்டர் பாலை நன்றாக காய்ச்சி, அரிசி மாவு கலவையை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இதனோடா அரை கப் சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 10 நிமிடங்களில் நன்றாக கெட்டியான பிறகு, அடுப்பை அணைத்து விடலாம்.

வேறொரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில், 2 முட்டைகள் சேர்த்து அடித்து விட வேண்டும். பின்னர், அரிசி மாவு கலவையை சேர்த்துக் கொண்டு, 1 டீஸ்பூன் அளவு வெண்ணிலா எஸன்ஸ் அல்லது ஏலக்காய் தூளை சேர்த்துக் கொள்ளலாம்.

இவை அனைத்தையும் நன்றாக கலந்த பின்னர், ஏற்கனவே சர்க்கரை பாகு ஊற்றிய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். அடுத்ததாக இட்லி பாத்திரத்தில் வைத்து மிதமான சூட்டில் ஏறக்குறைய 20 முதல் 30 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து எடுத்து பார்த்தால் மிகவும் சுவையான ஸ்வீட் தயாராகி விடும். 

Follow Us:
Download App:
  • android
  • ios