Asianet News TamilAsianet News Tamil

Pongal Recipe 2023 - அட்டகாசமான மட்டன் பால்ஸ் செய்யலாம் வாங்க!

வாருங்கள்! ருசியான மட்டன் பால்ஸை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

Pongal Recipe 2023 How to do  Mutton Balls in Tamil
Author
First Published Jan 7, 2023, 11:17 AM IST

பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் குஷி தான். ஏனெனில் பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை விடுவதால் நாம் அனைவரும் குடும்பத்துடன் இந்த பண்டிகையை கொண்டாடி நேரத்தை செலவழிக்கலாம். மேலும் நமக்கு பிடித்த ரெசிபிக்களை செய்து சுவைத்து மகிழலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான நான் வெஜ் ரெசிபியை செய்ய உள்ளோம்.

மாட்டுப் பொங்கல் அன்று , நம்மில் பலரும் அசைவ உணவுகள் தான் சமைப்போம் அந்த விதத்தில் இன்று நாம் சூப்பரான சுவையில் மட்டன் பால்ஸ் ரெசிபியை காண உள்ளோம்.

வாருங்கள்! ருசியான மட்டன் பால்ஸை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:  

  • மட்டன்-1/4 கிலோ
  • பொட்டுக்கடலை-1/4 கப்
  • சின்ன வெங்காயம்-15
  • பூண்டு- 4 பற்கள்
  • இஞ்சி- 1 இன்ச்
  • ஏலக்காய்-1
  • பட்டை -1 துண்டு
  • லவங்கம் - 2
  • சோம்பு-1/4 ஸ்பூன்
  • பச்சை மிளகாய்-1
  • தேங்காய்- 2 ஸ்பூன்
  • முட்டை -1
  • மல்லித்தழை- கையளவு
  • பிரட் தூள்- தேவையானஅளவு
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய்-தேவையான அளவு

            டேஸ்ட்டி அண்ட் ஹெல்த்தி "பீட்ரூட் அல்வா"!

செய்முறை:

முதலில் மட்டனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக அரிந்து அலசி தனியே வைத்துக் கொள்ள வேண்டும். பின் பொட்டுக்கடலையை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசான பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு மிக்சி ஜாரில் இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு, பட்டை, ஏலக்காய், லவங்கம், வெங்காயம், தேங்காய் மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே மிக்சி ஜாரை அலசி, சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மட்டனை அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொண்டு தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மட்டன் கலவையில் அரைத்து வைத்துள்ள உப்பு மற்றும் பொட்டுக்கடலை பொடி சேர்த்து மீண்டும் நன்றாக பிரட்டிக் கொண்டு கொண்டு உருண்டை பிடிக்கும் பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.ஒரு சின்ன கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு கிண்ணத்தில் பிரெட் க்ரம்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் பிசைந்த மட்டன் கலவையினை கையில் கொஞ்சம் எடுத்து ஒரே மாதிரியான அளவில் உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு உருண்டையினையும் முட்டையின் வெள்ளை கருவில் டிப் செய்து பின் பிரெட் க்ரம்ஸில் பிரட்டிக் கொண்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு, எண்ணெய் காய்ந்த பின் தீயினை சிம்மில் வைத்துக் கொண்டு, உருண்டைகளை போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios