குட்டீஸ்க்கு பிடிச்ச பொடி இட்லி.. இப்படி செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

Podi Idli Recipe  : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பொடி இட்லி செய்வது எப்படி என்று இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

podi idli recipe in tamil mks

இன்று காலை டிபனுக்கு உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இட்லி செய்ய போகிறீர்கள் என்றால், ஒரு முறை வித்தியாசமான சுவையில் பொடி இட்லி செய்து கொடுங்கள். இந்த இட்லியை குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த இட்லி சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு ரொம்பவே சுலபமாகவும் இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் பொடி இட்லி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இட்லி பொடி செய்ய தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை 
வத்தல்
உளுந்தம் பருப்பு
கடலைப்பருப்பு
மிளகு
சீரகம்
உப்பு
பெருங்காயம்

இதையும் படிங்க:   Suraikai Idli : சத்தான காலை உணவு சாப்பிட விரும்பினால் 'சுரைக்காய் இட்லி' செஞ்சு சாப்பிடுங்க! ரெசிபி இதோ..

தாளிப்பதற்கு..
இட்லி 
கடுகு
கொத்தமல்லி இலை
நல்லெண்ணெய் 

இதையும் படிங்க:  Pasi Paruppu Idli : அரிசி உளுந்தம் பருப்பு தேவையில்லை.. பாசிப்பருப்பு இருக்கா?! சத்தான இட்லி ரெடி!!

செய்முறை:
முதலில் கருவேப்பிலையை நன்றாக கழுவவும். பிறகு அடுப்பில் ஒரு வாணலியில் வைத்து அதில் கருவேப்பிலையை சேர்த்து மிதமான சூட்டில் இலைகள் சுருண்டு வரும் வரை வதக்கவும். பிறகு அதில் வத்தலை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். இதனை அடுத்து அதில் ஊளுந்த பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் கடலை பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும். எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன் அதை அடுப்பில் இருந்து கீழே இறக்கி ஆற வைத்து, பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் இட்லி பொடி ரெடி..

இப்போது, கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு, ஆறிய இட்லி அல்லது சூடான இட்லி எடுத்துக் கொள்ளுங்கள். பின் அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு இதில் இட்லியையும் சேர்த்து ஒரு முறை வதக்கவும். பிறகு அதில் தயாரித்து வைத்த இட்லி பொடியை இரண்டு ஸ்பூன் சேர்க்கவும். பின் நெய் சேர்க்கவும். நீங்கள் விரும்பினால் எண்ணெய் சேர்க்கலாம். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து அதை நன்கு கிளறி விடுங்கள். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லியை தூவி இறக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சபையில் பொடி இட்லி ரெடி.

இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios