Asianet News TamilAsianet News Tamil

Non Veg Tamil: பட்டர் சிக்கன் செய்து அசத்தலாம் வாங்க!!

சிக்கன் எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட்டால் போர் அடிக்கத்தான் செய்யும். பெரியவர்களுக்கே சலிப்பு இருக்கும்போது, சிறியவர்களுக்கு சலிப்பு இருக்கத்தானே செய்யும். வகை வகையாக செய்து கொடுத்தால் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.

Non veg recipe: How to make butter chicken in Tamil
Author
First Published Nov 3, 2023, 3:49 PM IST | Last Updated Nov 3, 2023, 3:49 PM IST

அந்த வகையில் இன்று பட்டர் சிக்கன் எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம். சப்பாத்தி, நான், சாதம், பாஸ்மதி சாதம் ஆகியவற்றுடன் இந்த பட்டர் சிக்கன் ஒத்துப் போகும். 

பட்டர் சிக்கன் செய்முறை:
எலும்பு இல்லாத சிக்கன் அரை கிலோ 
முக்கால் முதல் 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு 
கால் டீஸ்பூன் உப்பு 
அரை டீஸ்பூன் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் 
1 டீஸ்பூன் கரம் மசாலா 
1 டீஸ்பூன் கஸ்தூரிமேதி 
கால்  டீஸ்பூன் மஞ்சள் தூள் 
அரை டீஸ்பூன் சீரகம் தூள் 
1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள் 
முக்கால் டீஸ்பூன் ஆயில்  
முக்கால் டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் 
அரை கப் கட்டி தயிர் 

தற்போது சிக்கனில் சுத்தமாக தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். தண்ணீர் இருந்தால் டிஸ்ஸூ பேப்பரில் துடைத்து எடுத்து விடவும். பின்னர் சிக்கனுடன் சிவப்பு மிளகாய் பவுடர், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசையவும். இத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, சீரகம் பவுடர், கொத்தமல்லி பவுடர், கஸ்தூரிமேதி, மஞ்சள் தூள், தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பிரிஜ்ஜில் சுமார் பத்து மணி நேரத்திற்கு மேலாக வைக்கவும். 

கிரேவி செய்வதற்கு:
2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் 
1 பட்டை இரண்டு இஞ்ச் அளவுக்கு 
4 ஏலக்காய் 
முக்கால் டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் 
1 அல்லது 2 பச்சை மிளகாய் 
1 அல்லது 1 1/2 டேபிள்ஸ்பூன் காஷ்மீரி சிவப்பு மிளகாய் பவுடர்
1 அல்லது 1 1/2  டேபிள்ஸ்பூன் கரம் மசாலா 
அரை டீஸ்பூன் சீரகம் பவுடர் 
1 அல்லது 1 1/2  டீஸ்பூன் கொத்தமல்லி பவுடர் 
அரை டேபிள்ஸ்பூன் கஸ்தூரிமேதி 

500 கிராம் தக்காளியை நன்றாக கட் செய்து, மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும் 
இதேபோல் 15 முந்திரியை அரைத்துக் கொள்ளவும். 

கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். இவை வெடித்தவுடன், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பச்சை மிளகாய் சேர்க்கவும். தற்போது அடுப்பை குறைத்து மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகம் தூள், கொத்தமல்லி பவுடர் சேர்க்கவும். தக்காளி விழுதை சேர்க்கவும்.  இவை அனைத்தையும் கிளறி விடவும். நன்றாக கொதிக்க விடவும். தெறிக்காமல் பார்த்துக் கொள்ளவும். சுமார் பதினைந்து நிமிடங்கள் கொதிக்கட்டும்.

முந்திரி விழுதை சேர்க்கவும். பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்கவும். நன்றாக கலந்து விடவும். கெட்டியாக வரும்வரை கலந்து விடவும். 

கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பிரிட்ஜ்ஜில் இருந்து எடுத்த சிக்கன் பீஸ்களை அடுக்கி வைக்கவும். இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும். திருப்பி போட்டு வேக வைக்கவும். தீயாமல் பார்த்துக் கொள்ளவும். ( சமைப்பதற்கு முன்பே சிக்கனை பிரிட்ஜ்ஜில் இருந்து வெளியே எடுத்து வைத்து விடவும்). உங்களுக்கு பிரவுன் கலரில் வேண்டும் என்றால், தீயை கூட்டி வைத்து சிக்கன் வேக விடவும். அனைத்து சிக்கனையும் இதுபோல் வேக வைக்கவும். 

கிரேவி கட்டியானாதா என்று பார்க்கவும். தற்போது சிக்கனை கிரேவியில் சேர்க்கவும். மிகவும் கெட்டியாக இருந்தால், கிரேவியுடன் சுடுநீர் கொஞ்சம் சேர்க்கவும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios