இந்த மந்திர இலைகளை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க.. நீண்ட ஆயுளுடன் வாழ்வீங்க..!!
தினமும் வெறும் வயிற்றில் இந்த இலைகளை நாம் சாப்பிட்டு வந்தால் பலவிதமான அற்புத பலன்களை பெறலாம் அது என்னென்ன இலைகள் என்பதை குறித்து இங்கு படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
இந்த பூமியில் கடவுளின் படைப்பில் ஒன்றும் குறைவில்லை. அனைத்தும் அழகானது.. அப்படி இயற்கையாகவே, பலவகையான மூலிகை செடிகள், இலைகள் உள்ளன. அந்தவகையில், சிலவகை இலைகளை நாம் சமைத்து சாப்பிடுவதைவிட, வெறுமனே சாப்பிட்டால் அவற்றில் இருக்கும் பலன் நமக்கு அப்படியே கிடைக்கும். அதிலும் குறிப்பாக இந்த இலைகளை நாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எண்ணற்ற பலன்களை நாம் பெறலாம். அதன்படி, இங்கு ஒருசில இலைகளைப் பற்றி பார்க்கலாம்...
துளிசி:
இது "மூலிகைகளின் ராணி" என்று அழைக்கப்படுகிறது. கோயில்களுக்கு நடுவே இவை வளர்க்கப்படுகிறது. மேலும் இந்த இலையில் 300க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன தெரியுமா?
துளசி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும்?:
நாம் என்றுமே இளமையாக இருக்க துளசி இலை பெரிதும் உதவுகிறது... அதற்கு முதலில் ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கைப்பிடி அளவு துளசியை போட்டு, இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். பின் மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடித்தால் எந்த நோயும் உங்களை அண்டாது. இதனை நீங்கள் இப்படி தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் தோல் சுருக்கம் நீங்கும், நரம்புகள் பலப்படும் மற்றும் பார்வை குறைபாடு நீங்கி தெளிவான பார்வை கிடைக்கும்.
இதையும் படிங்க: எக்கசக்கமான நன்மைகள் உள்ள "ஓமவள்ளி இலை" .. ஒரு முறை இந்த இலையை இப்படி பயன்படுத்தி தான் பாருங்களே!
துளிசி டீ:
துளசி டீ தயாரிக்க முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கைப்பிடி அளவு துளசியை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து அதில், 1 தேக்கரண்டி அளவு தேன், 2 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு சேர்த்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஆண்களே மீண்டும் வெற்றிலை பாக்கு போட ஆரம்பிங்க.. ஏன்னா அவ்வளவு நன்மைகள் இருக்கு..
துளசி இலை பாதிப்பு:
துளசி இலையை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம் ஏனெனில் அதில் பாதரசம் இரும்பு சத்து போன்றவை உள்ளதால், அவற்றை நாம் சாப்பிடும் போது அவை பற்களை கறைபடுவது மட்டுமின்றி, பற்களின் நிறம் மாறும். மேலும் எனாமலில் தேய்மானம் அடையும். எனவே கொஞ்சமாக துளசி இலைகளை சாப்பிடவும் அல்லது மெல்லவும், இல்லையெனில் முழுவதுமாக துளசி இலைகளை விழுங்கலாம்.
வேப்பிலை:
இந்த இலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகுந்த பலன் கிடைக்குமாம். எனவே தினமும் 4-5 வேப்ப இலைகளை நன்கு கழுவி சாப்பிட்ட வேண்டும். இதனால் நீரிழிவு, நோய் ரத்த சோகை போன்ற பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு கிடைக்கும். அதுமட்டுமின்றி இது புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கக்கூடிய மருந்துகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வேப்பிலை சாப்பிட்டால் கிடைக்கும் பிற நன்மைகள்:
வேப்பிலை சாற்றில் நீங்கள் தேன் கலந்து குடித்தால், மஞ்சள் காமாலை நீங்கும். மேலும் கல்லீரல் பிரச்சனையை சரி செய்ய இது உதவுகிறது. இதுமட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்தத்தை சுத்திகரிக்க செய்யவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. அதுபோல், நீங்கள் வேப்பங்கொழுந்து இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குழந்தைகளுக்கு வெறும் வயிற்றில் குடிக்க கொடுங்கள். இதனால் குழந்தைகளின் வயிற்று பூச்சிகள் வெளியேறி, அவர்களின் வயிறு சுத்தமாகும்.
கறிவேப்பிலை:
சித்த மருத்துவத்தில் இதற்கென தனி இடம் உண்டு. இது சிறந்த எதிர்ப்பு சக்தியாக திகழ்கிறது. மற்றும் சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது. குறிப்பாக இது இளநரையை தடுக்க பெரிதும் உதவுகிறது இதனை நீங்கள் அடிக்கடி சாப்பிட்டால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்காது... நீங்கள் தினமும் வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிட்டு வந்தால், அவை வயிற்றை சுத்தப்படுத்தும் அஜீரணக் கோளாறு பிரச்சினைகளை நீங்கும், ரத்தத்தை விருத்தியாக்கும் மற்றும் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
புதினா:
இது ஒரு குளிர்ச்சியான இல்லை என்று சொல்லலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது எனவே இதற்கு இதனை பயன்படுத்தும் முறை என்னவென்றால் முதலில் ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு புதினா இலைகள், எலுமிச்சை சாறு கலந்து இரவு முழுவதும் அப்படியே வைத்து விட வேண்டும். பின் மறுநாள் காலை வெறும் வயிற்றில் இந்த நீரை குடிக்க வேண்டும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் பல்லில் இருக்கும் கரை நீங்கும். அதுபோல் இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் சருமத்தின் துளைகளை இறுக்கமாக வைக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. குறிப்பாக வயதாவது தடுக்க உதவுகிறது.