Asianet News TamilAsianet News Tamil

இந்த கிறிஸ்துமஸ்க்கு சுவையான சாக்லேட் புட்டிங் செய்து குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள்!

வாருங்கள்!ருசியான சாக்லேட் புட்டிங்கினை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம். 

in this christmas  to Make Chocolate Pudding recipe in home
Author
First Published Dec 22, 2022, 10:07 AM IST

உலகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் கிறிஸ்துமஸ்ஸும் ஒன்று. அந்த கிறிஸ்துமஸ் தினம் வர இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன. இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் உங்க குடும்ப உறுப்பினர்களுக்கு வித்தியாசமாக ஒரு ரெபிசிபியை செய்து அவர்களை ஆச்சரியபடுத்த வேண்டுமென்றால் நம் வீட்டிலேயே சுவையான ஒரு புட்டிங் செய்து கொடுங்கள். 

புட்டிங்கில் பல விதங்கள் உள்ளன. அந்த வகையில் இன்று நாம் ருசியான சாக்லெட் புட்டிங் செய்வதை காண உள்ளோம். இதனை செய்து கொடுத்து உங்கள் செல்ல குழந்தைகள் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இது மிகவும் சாப்ஃட்டாக இருக்கும்.  வாருங்கள்!ருசியான சாக்லேட் புட்டிங்கினை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

கார்ன் பிளார்-2 ஸ்பூன் 
கோகோ பவுடர்-2 ஸ்பூன்
சர்க்கரை- 1 1/2 ஸ்பூன் 
பால்- 5 ஸ்பூன்
மில்க் பவுடர்- 5 ஸ்பூன் 
வெண்ணிலா எசென்ஸ் -1/4 ஸ்பூன் 
சாக்கோ சிப்ஸ்-2 ஸ்பூன் 
பிரெஷ் க்ரீம் -1 ஸ்பூன் 

செய்முறை: 

முதலில் ஒரு பௌலில் 2 ஸ்பூன் சாக்கோ பவுடர், 2 ஸ்பூன் கார்ன் பிளார், 2 ஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின் அதில் 5 ஸ்பூன் அளவிலான பாலை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் மில்க் பவுடர் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். (கட்டிகள் இல்லாமல் நன்றாக பீட் செய்ய வேண்டும்)

பின் அதனை அடுப்பில் வைத்து தீயினை சிம்மில் வைத்து சூடு செய்ய வேண்டும். பின் அதில் வெண்ணிலா எசென்ஸ் ஊற்றி மீண்டும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இப்பொது அதில் டார்க் சாக்லேட் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து மீண்டும் மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

பின் அந்த பௌலை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். கலவையை ஆற வைத்து விட்டு, பிரிட்ஜில் வைத்து சுமார் 2 மணி நேரம் வரை வைத்து குளிர செய்ய வேண்டும். 

2 மணி நேரத்திற்கு பிறகு பிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து புட்டிங்கை டேஸ்ட் பார்த்து தேவை என்றால் வேண்டுமானால், சில சாக்லேட் சிப்ஸ் அல்லது பிரெஷ் க்ரீம் சேர்த்து பரிமாறினால் சாக்லேட் புட்டிங் ரெடி!

இந்த கிறிஸ்துமஸ்க்கு இதனை செய்து உங்கள் அன்பானவர்களுக்கு கொடுத்து சுவைத்து மகிழுங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios