கோயம்புத்தூர் ஸ்டைலில் மணக்கும் தக்காளி குழம்பு ரெசிபியை செய்யலாம் வாங்க!

வாருங்கள்! கோயம்புத்தூர் ஸ்டைல் தக்காளி குழம்பு ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How tom Make Coimbatore Style Tomato Gravy in Tamil


திருநெல்வேலி ஸ்டைல், மதுரை ஸ்டைல், காரைக்குடி ஸ்டைல் என்று ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு விதமான சமையல் முறையை பின்பற்றுகிறார்கள். ஒவ்வொரு விதமான சமையல் முறையும் அதற்கான தனித்துவமான ருசியையும் சிறப்பையும் உள்ளடக்கி இருக்கும்.

அந்த வகையில் இன்று நாம் கோயம்புத்தூர் ஸ்டைலில் ஒரு ருசியான குழம்பு ரெசிபியை காண உள்ளோம். இந்த குழம்பு ரெசிபியை நாம் இட்லி,தோசை, சாதம் என்று அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.

வாருங்கள்! கோயம்புத்தூர் ஸ்டைல் தக்காளி குழம்பு ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காயம் - 5
  • தக்காளி - 5
  • தனியா விதைகள்- 1/2 கப்
  • தேங்காய் - 1/4 கப்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • மல்லித்தழை-கையளவு
  • கடலை பருப்பு - 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 1-2
  • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  • தனியா - 1 ஸ்பூன்
  • சீரகம் - 1/2 ஸ்பூன்
  • சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
  • சோம்பு - 1/2 ஸ்பூன்
  • கடுகு - 1 ஸ்பூன்
  • மிளகு - 1/2 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

 சத்தான ஹலீம் கஞ்சி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க!

செய்முறை:

முதலில் வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் அதில் காய்ந்த மிளகாய், கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொண்டு அடுத்ததாக அதில் மிளகு, சோம்பு,தனியா மற்றும் சீரகம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வாசனை வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் வெங்காயம் சேர்த்தும் பொன்னிறமாக மாறும் வரை வதக்கி கொண்டு பின் தக்காளி சேர்த்து ,தக்காளி மசியும் வரை வதக்கி கொண்டு பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்தாக அதில் துருவி சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வரை வதக்கி விட்டு கலவையை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு ஆற வைக்க வேண்டும். கலவை ஆறிய பிறகு மிக்சி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொண்டு பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொண்டு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

கடாயில் இப்போது தண்ணீர் ஊற்றிக் கொண்டு அதில் சாம்பார் பொடி சேர்த்து தீயினை சிம்மில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை சேர்த்து கிளறி விட்டு பரிமாறினால் கோயம்புத்தூர் ஸ்டைல் தக்காளி குழம்பு ரெடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios