கம கம மசாலா வாசனையில், சுட சுட உடுப்பி சாம்பார்! - செய்யலாம் வாங்க!

உடுப்பி ஸ்டைலில் ஒரு ரெசிபியை பார்க்க உள்ளோம்.இதனை மிக குறைவான நேரத்தில் சுலபமாக செய்யலாம் வாங்க! 

How to prepare Udupi style Sambar in Tamil

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு விதமான சமைக்கும் முறை அல்லது பழக்கம் இருக்கும். உதரணமாக, மதுரை, செட்டிநாடு, நெல்லை , கொங்கு நாடு என்று ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக சமைத்து உண்ணும் பழக்கம் இருக்கிறது. 

அந்த வகையில் இன்று நாம் உடுப்பி ஸ்டைலில் ஒரு ரெசிபியை பார்க்க உள்ளோம்.இதனை மிக குறைவான நேரத்தில் சுலபமாக செய்யலாம் வாங்க! என்ன ரெசிபியா இருக்கும்? என்று யோசிக்கிறீர்களா? உடுப்பி சாம்பார் ! இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். 

தேவையான பொருட்கள்: 

துவரம் பருப்பு - 1/2 கப் 
துருவிய தேங்காய் - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
வெல்லம் - 1 1/2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
தனியா - 1 1/2 ஸ்பூன் 
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 4 
கறிவேப்பிலை - 1 கொத்து 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
புளிச்சாறு - 1/2 கப் 
காய்கறிகள் (கத்திரி, முருங்கை, கேரட்,) - 2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இன்று இரவு சப்பாத்திக்கு ஸ்பைஸியான பேபி கார்ன் மசாலா இப்படி செய்து பாருங்க !

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை சுத்தம் செய்து நன்றாக நீரில் அலசி கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, துவரம் பருப்பை போட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சுமார் 3 விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து , அதில் சிறிது எண்ணெய் ஊற்றி , எண்ணெய் சூடான பின் உளுத்தம் பருப்பு ,வெந்தயம் சேர்த்து லேசாக வறுத்து, பின் தனியா,காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்துக் கொண்டு இறக்கி விட்டு, பின் அதனை குளிர வைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் பின் அதே கடாயில்,சிறிது எண்ணெயை ஊற்றி , சூடான பின், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும். அதனுடன் இப்போது கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சுமார் 4 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.

இப்போது இதில் அரிந்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கி வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் புளிச்சாறு, தண்ணீர், வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும். இப்போது வேக விட்டு மசித்து வைத்துள்ள பருப்பு சேர்த்து மீண்டும் கிளறி விட்டு , நன்றாக கொதிக்க விட்டு இறக்கினால், கம கம என்று மணக்கும் உடுப்பி ஸ்டைல் சாம்பார் ரெடி!!!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios