இன்று இரவு சப்பாத்திக்கு ஸ்பைஸியான பேபி கார்ன் மசாலா இப்படி செய்து பாருங்க !

பேபி கார்ன் வைத்து அட்டகாசமான பேபி கார்ன் மசாலா எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். 
 

How to make Baby Corn Masala in Tamil

வழக்கமாக நாம் சப்பாத்திக்கு கிழங்கு மசாலா, பட்டாணி மசாலா, காய்கறி குருமா என்று நாம் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று சற்று வித்தியாசமாக பேபி கார்ன் வைத்து அட்டகாசமான பேபி கார்ன் மசாலா எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். 

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் - 250 கிராம் 
பால் - 1/2 கப் 
பிரஷ் க்ரீம் - 1 1/2 ஸ்பூன் 
பட்டர் - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன் 
தனியா தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
மல்லித் தழை - கையளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 

வதக்கி அரைப்பதற்கு:

பெரிய வெங்காயம் - 1 
தக்காளி - 2
பூண்டு - 4 பற்கள் 
எண்ணெய் - தேவையான அளவு 

சிலோன் பரோட்டாவுக்கு சூப்பர் சைடிஷ் ''சிலோன் சிக்கன் ப்ரை'' செய்வோமா?

செய்முறை: 

முதலில் பேபி கார்னை நன்றாக அலசி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் குக்கர் வைத்து அதில் வெட்டி வைத்துள்ள பேபி கார்ன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 1 விசில் வைத்து அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும். 

அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், பூண்டு சேர்த்து வதக்கி கொண்டு, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட வேண்டும், பின் தக்காளி சேர்த்து, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி விட வேண்டும். பின் அதனை ஆற வைத்து விட்டு , ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதே பானில், சிறிது எண்ணெய் மற்றும் பட்டர் சேர்த்து சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.பின் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி , பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். இப்போது அதில், அரைத்து எடுத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். 

இப்போது அதில் தனியா தூள் , மிளகாய் தூள்,கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து சுமார் 2 நிமிடங்கள் கிளறி விட்டு ,பின் அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து பிரட்டிகொண்டு, அதில் பாலை சிறுக சிறுக ஊற்றி கலவை கெட்டியாக கிரேவி போல் வரும் பொழுது , அடுப்பின் தீயை சிம்மில் வைத்து சுமார் 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். 

இறுதியாக அதில் வேக வைத்துள்ள பேபி கார்ன் மற்றும் அதன் ஸ்டாக் சேர்த்து, அடுப்பினை மிதமாக வைத்து கிட்டத்தட்ட 4 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க விட்டு இறக்கிய பின்னர் கையளவு மல்லித்தழையை தூவினால், பேபி கார்ன் மசாலா ரெடி!!! 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios